உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

முற்றுந் துறந்தபின் முக்காலச் செய்தியும்

உற்றுத் தெளிந்தொன்றும் உண்ணாரே அந்தணர்

சற்றுந் துறவாமலே - நகர்ச்

சார்பா யிருந்தேயிற் சீராக வாழாரே

(அந்தணர்)

257. தமிழகம் அனைவர்க்கும் தாயகம் ஒன்றையே நினைத்திருந்து' என்ற மெட்டு

1

உயர்திணை தோன்றி வந்து உலகமுன் மொழியெ ழுந்து

ஒருகுலம் ஒருதே வென்று உணர்த்து கின்ற தாயகம் உலகம் போற்றும் தாயகம் உயர்ந்த தமிழன் தாயகம் இலகு முதனூல் தாயகம் என்று முள்ள தாயகம்.

2

எந்த வூருஞ் சொந்த வூராம்

என்று ரைக்கும் தாயகம்

எவரையும்நல் உறவென் றெண்ணி

ஏற்கும் நல்ல தாயகம்

வ வந்தவரையே வாழ வைக்கும்

(உயர்)

வண்மை மிக்க தாயகம்

வாளிற் கொடிய இரண்ட கர்க்கும்

வாழ்வு நல்கும் தாயகம்

(உயர்)

215