உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

259. உலகில் நன்மை ஓங்க

ஒருதாய் மக்கள் நாமென்போம்' என்ற மெட்டு

ப.

ஒன்றே குலமென் றுணர்ந்திடுவோம் ஒருவனே தேவன் வழிபடுவோம்

ஒன்றே ஆட்சி அமைத்திடுவோம்

ஒற்றுமை உலகில் வளர்த்திடுவோம்.

உ.1

என்றும் ஏமாற் றொழிந்திடவும்

இனிதாந் தமிழ்முன் னிடம்பெறவும்

ஒன்றும் ஆங்கிலம் பொதுவுறவும்

ஒன்றாய் அனைவரும் உயர்ந்திடவும்

(ஒன்றே)

2

உழவனே நாட்டில் தலைமைபெற

ஒவ்வொரு தொழிலும் வளர்ச்சியுற

விழுமுறு பசியும் பிணியுமற

வெம்மையும் பஞ்சமும் விலகியிற

(ஒன்றே)

3

அன்பும் இன்பும் அழகொழுக

அறிவுடன் அமைதி உறவுகொள

நண்பும் பண்பும் நடம்புரிய

நடுநிலை நயனே நலம்பெருக.

261. தண்டமிழ்த் தொண்டர்

'அஞ்சலி செய்திடுவோம்' என்ற மெட்டு

ப.

என்றுமே கொண்டாடுவோம் இன்பமுடன் நாம்

து. ப.

தண்டமிழுக்குச் செய்த தொண்டுகளை நினைந்து

(ஒன்றே)

(என்றுமே)

217