உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

பண்

2. 1.

பண்டுநக் கீரன்பின்னே பரஞ்சோதி சிவஞானம் பரவிய சுந்தரம் பண்பட்ட பூரணலிங்கம் மண்டிய பரிதிமால் மறைமலை நீலாம்பிகை மாணிக்கம் துடிசையார் மகிழ்நன் நமச்சிவாயம்.

2

காசுவேங் கடசாமி கதிரேசன் இராமசாமி கரந்தை யுமாமகேசன் கழகத் திருவரங்கம் ஆசறு கலைகளும் ஆட்சியும் தமிழிலே அமைசுப்பிர மணியம் அருஞ்சாமி வேலாயுதம்

3

ஆபிரகாம் பண்டிதர் அண்ணா மலையரசர் அரியபாணர் கைவழி வரகுண பாண்டியனார் சோமசுந் தரம்கந்த சாமி வரதநஞ்சை சொல்லரும் புரட்சிப்பா வல்லன் பாரதிதாசன்

4

இசைத்தமிழ்க் கலம்பகம்

(என்றுமே)

(என்றுமே)

(என்றுமே)

ஆங்கிலத் திற்குறளும் அருந்திரு வாசகமும் அழகிய நாலடியும் மொழிபெயர் போப்பையரும் ஈங்குள திரவிட இனம்படு மொழிகளின் இயல்புறும் ஒப்பியலை இயற்றிய கால்டுவெலும்

(என்றுமே)

காப்பி

261. அ. இராமசாமிக் கவுண்டார்

ப.

சேலங் கல்லூரித் தலைசிறந்த முதல்வர் என்றும் சாலும் புகழ்இராம சாமிக் கவுண்டர் அன்றோ.

தாளம் - முன்னை

து. ப.

ஞாலமுழு தும்தமிழ் நன்கு பரவஅடி

கோலவந் தவரென்று கூறுதல் மிகையுண்டோ

(சேலங்)