உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இசைத்தமிழ்க் கலம்பகம்

273. மதுரைத் திருப்புத்தூர்

உயர்திரு. ஆறுமுகம்பிள்ளை

‘சுதேச மகமதல்லி' என்ற மெட்டு வகை

ப.

ஆறுமுகம் தமிழ்க் களித்த வகை

ஆயிரத் தோருருபா என்ற தொகை

மாறுமுகம் இன்றி மலர்ந்தநகை

மாயிரு ஞாலமே மகிழுந் தொகை

(உரைப்பாட்டு)

குலமத கட்சிச் சார்பாக வன்றிக்

குமரித் தமிழ்க் கென்றொரு பழஞ்சல்லியும் கொடாத இந்தக் காலத்திலே புலமையிலானும் பொற்கிழி பெற்றதிருப்

புத்தூர்ச் செந்தமிழ்ப் புரவலன் ஆறுமுகம் புகழொடு நிலவுக ஞாலத்திலே.

6

274. மதுரைமாநகர்

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

மதுரைநன் மாநகர் மதிக்குலக் கோநகர்

மாநில மெங்கணும் தானிலையே நிகர்

மதியணிந் தான்மலை மகளொடு மகன்பகர்

மணிமொழி யெனுந்தமிழ் அணிகள் புலவர்நுகர்

மன்றமும் நின்று வளர்ந்து - தண்டமிழ் நன்று கிளர்ந்து மதிதிகழ் பனுவல் பிறந்த - மறைபுகழ் குறளுஞ் சிறந்த (மதுரை)

2

பார்க்குள் உயர்விலைப் பருமுத்தம் சுந்தர

பாண்டியன் பாதமும் பூண்டன என்றுமுன்

மார்க்கோ போலோசொன்ன மாட்சிமைதான் என்ன

மயங்கிவிண் ணோஎன்ன நயங்களெல்லாம் மின்ன

நாகரிகம் பண்பாடு - மாநகரும் இல்லை ஈடு

நளினமும் உணவுமிருந்து - நடனமும் இசையும் விருந்து (மதுரை)