உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இசைத்தமிழ்க் கலம்பகம்

4

செல்லும் வரிசையைச் சிதைத்து விட்டால்

சிறிதுநே ரத்திலே சேர்ந்துகொண்டு

நல்ல படியாக நாயகன்சொல்

நாடிக் கடைப்பிடித் தோடிவிடும்.

5

ஏனை வளைகளில் வாழ்கின்றவும்

ஏனை யெறும்பினம் ஆனவையும் தானான நேர்ச்சியாய்ச் சார்ந்திடினும்

சண்டை பெரும்பாலும் இன்றிச்செல்லும்.

6

சோம்பி யிராதென்றும் சுற்றிவந்து

சுறுசுறுப் பாகத்தம் கடமைசெய்து

தேம்பாகும் கூடிய வேறெறும்பும்

தின்ன அன்புகொள்ளும் உன்இனமே.

7

எறும்பு வீழ்ந்தபொருள் ஏற்றே யுண்டால் எய்துவர் கூரிய பார்வை யென்பார் இறும்பூதாம் உன்அகக் கண்வலிமை எய்துவர் என்பதோ உட்கருத்தே.

8

உயிரினத் துள்மாந்தன் உயர்ந்தவனாம் ஒருசிலர் மாந்தருள் உயர்ந்தவராம் அயர்ந்துமதம் அறிவியல் ஆற்றலினால் அணுவுந் தீங்கில்லாமை அறிவுரைப்பாய்.

277. கும்மிப் பாட்டு

'அன்புடைய தோழியரே' என்ற மெட்டு

பண் காப்பி

ப.

கும்மியடிப் போம்நாம் இன்றே கூடிவாரும்

கும்மாள மாகவே எல்லீரும்.

தாளம் - முன்னை

(கும்மி)