உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

உ.1

வட்டமாய் நின்றுபின்னே வலமாகச் சுற்றிவந்து கொட்டிக் கைகள் இடைக்குறுக்கே வைப்போம்.

2

(கும்மி)

ஆடிவரும் மயில்போல் அழகாய் அடியெடுத்துப் பாடிக் கொண்டின்பமாய்ப் பலமுறையும்.

(கும்மி)

3

தேனார் மணங்கமழும் தென்றல் நுகர்ந்துகொண்டு மானேர் விழிகளும் மகிழ்கூட.

(கும்மி)

4

உள்ளம் ஒடுங்கிநிற்க ஒருபெருங் கடவுளைக்

கள்ள மில்லாமலே கைதொழுவோம்

(கும்மி)

5

தாயுந்தந்தை யரசும் தனிமொழி யானதமிழ்த் தாயுந் தழைக்கவே நீடூழி.

(கும்மி)

279. கோலாட்டப் பாட்டு

'ராரவேணுகோஒ பாலா' என்ற தாளவிசை மெட்டு

பண்

பிலகரி

ப.

ஆடுவோம் கோலாட்டம்வாரும் ஆடகர் அனைவரும்

து. ப.1

231

தாளம்

முன்னை மு

புகழ்ந்திடவே

கூடிவண்ணக் கோலெடுத்துக் கோலமாக நின்றியங்கிப் பாடி யின்பமாய் இணைதேடியே சென்று வழி

மீளவந்து வலமிடம் நெடுகப் பலமுறைதிருமி நலவொலி

யடிகொள. (ஆடு)