இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
236
பண்
-
நாட்டை
இசைத்தமிழ்க் கலம்பகம்
286. தமிழ்நாட்டு வாழ்த்து வாழ்க அந்தணர்' என்ற மெட்டு
தாளம்
—
முன்னை
மு
1
வாழ்க தமிழகம் வழங்க உரிமைகள் வீழ்க நன்மழை விளைக நிலமெலாம் ஆழ்க அறிவியல் அமைக நன்பொறி சூழ்க நண்பெனச் சுலவு நாடுகள்.
2
பல்கு ழுச்செரு பாழ்செ யுட்பகை கொல்கு றும்பொடு குலங்கள் ஒழியவே கல்வி பரவுக கலைகள் வளருக செல்வம் பல்வகை செறிக எங்கணும்.
3
பசியும் பிணியும்வன் பாடும் வறுமையும் நசிய முழுவதும் நல்ல ஆட்சியால் கசியும் அன்பொடு கருதும் அறவினை வசிய மாம்பெரு வண்மை நண்ணவே.
4
உழவு கைத்தொழில் ஓங்க வணிகமும் விழவு மேம்பட விஞ்ச இன்பமும் முழவுத் தோள்வலம் முதிர்க மறவரே குழவுத் தன்மையைக் கொள்க துறவியர்.
5
புரியுந் தொழிலெலாம் பொறியி னாகுக பரியுங் காளையும் பாடு நீங்குக பெரிய குடும்பமாய்ப் பிறங்கு முலகிலே பிரியுந் தமிழகம் பெருமான் அருளவே.