உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

287. இந்திய ஒன்றிய வாழ்த்து

ஜனகணமன என்ற மெட்டு

1

இந்திய ஒன்றியம் இலகியே வாழி

ஏதமில் லாதுநீ டூழி

தென்றிசைக் குமரிமு னைமுக முதலே வடதிசைப் பனிமலை வரையும்

தங்கிய பலமுத் தரமுள நாடும் தழுவிய மதக்கோட் பாடும் நிறமொழி யுடைநடை யூணும் திறமிகு குலமும்வே றேனும் இனமெலாம் ஒருவகை காணும் இந்திய ஒன்றியம் இலகியே வாழி ஏதமில் லாதுநீ டூழி

இலகே இலகே இலகே

இலகியே நிலவுக வே.

2

இந்திய ஒன்றியம் உலகமே நிலவ

இலகிய கதிரென நிலவ கீழையர் முழுவதும் கீழைய ரல்லர்

மேலையர் மேலைய ரல்லர்

அறிவியல் துறையதில் பெரியவர் குடவர்

ஆவியின் வளர்ச்சியில் குணவர்

அணுவியற் குண்டுகள் நன்றோ

அழிபகை அஃறிணை யன்றோ

இழிதகை ஒழிகவே இன்றே

எங்கணும் ஒருவனே இறைவனென் றெண்ணி

இன்புறு தமிழியல் நண்ணி

இலகே இலகே இலகே

இந்திய ஒன்றியமே.

237