உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பனுவல்

இசைத்தமிழ்க் கலம்பகம்

2. கடவுளை வேண்டல்

'மாசில் வீணையும்' என்ற மெட்டு

பண்

(பூரிகலியாணி)

1

உலகம் யாவையும் உள்ளன வாக்கலும்

நிலைநி றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாய்தனித் தலைவா உன்திருத் தாளில்எம் தலையே.

2

மருளுறும் இந்த மாநிலம் யாங்களே

தெருளுறும் வண்ணம் தீந்தமிழ்ப் பாணியால் பொருளுறும் உன்றன் புகழேபு ரிந்தனம் அருளுவாய் இன்றே அறமுது கடலே.

3

குலமொன் றாகியே கோவேஎம் தந்தையே உலக ஆட்சியும் ஒன்றாக வோங்கியெம் புலமை யன்பினாற் போரெது மின்றியே

நலமாய் வாழ்ந்திட நன்மதி யருளே.

3. இறைவணக்கம்

பண் (பந்துவராளி)

ப.

எங்கும் நிறைந்த பொருளே

இன்றருளே

து. ப.

தன்கண் பூதம் ஐந்தும் தங்கும்படி விரிந்தும்

நுண்பொருளும் நுழைந்தும் நுண்ணியதின் நுணித்தும்

தாளம் - முன்னை

தாளம் - முன்னை

(எங்கும்)