உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இசைத்தமிழ்க் கலம்பகம்

அ. 1

எங்கும் நிறை இறைவா உன்றன்

எழிலார் கழல் இணைபணி கின்றேன்

(அன்பே)

2

தேவா உன் திருப்புகழ் பாட

தென்னோர் பண்ணுந் திறமுங்கூட

(அன்பே)

3

தீங்கே விளைத்திடுஞ் சொல்லெலாம்

தீரவருள் தீந்தமிழிலே

இதிலுள்ள அளபெடைகள் வருமாறு :

ப. – அஅன்பேஎ.

து. ப. - இஇன்பே௭.

(அன்பே)

அ. 1. எஎங்குஉம். இறைவாஆ. எழிலாஅர். 2. தேஎவாஆஆ. தெஎன்னோஒர். திறமுஉம் 3. தீஇங்கேஎ. சொஒல். தீஇருஉம். தீஇம்.

(குற்றுயிர் அடுக்கியிசைப்பது குறிலடுக்கிசையாம் நெடில் அளபெடுத்தல் உயிரளபெடையாம்.

அஅன்பே - குறிலடுக்கு

அன்பே௭ – உயிரளபெடை

- பதிப்பாசிரியர்)

குறிப்பு : இப் பாட்டு இசைமாணவர்க்கென்றே இயற்றப்பட்டது. தனித்தமிழ்ப் பாட்டை விரும்புவார் இதைப் பாடலாம்.

6. இசையின்பம்

'கொலுமவரெகத' என்ற மெட்டு

பண்- (தோடி)

ப.

தாளம் - முன்னை

இசையினும் இன்பம் வேறுண்டோ எவ்வகை யுயிர்க்கும்

து. ப.

வசையற வாழுலகில் வழங்கறம் இரண்டிலும் இசைபெற ஈரின்பமும் இருமடி யாக்கும்

(இசை)