உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

10

துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே!

11

இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே!

12

கடவுளென்று முழுமுதலைக் கண்டவனும் தமிழனே கரையிலின்பம் நுகரவழி காட்டியவன் தமிழனே!

10. தமிழ் வரலாறு

உன்னையே அன்புடனே வாரியணைந்தேன்' என்ற மெட்டு

1

குமரிமா மலைப்பிறந்த குழவித் தமிழே

குலவுமலர் முல்லையணை கிடந்த தமிழே ஏனை நிலம்நின்றே இங்குவந்தாய் என்றே

வானைமறை உன்பகைவர் வம்புரைத்தார் முன்றே

2

மருதநன் னிலத்துருண்டு புரண்ட தமிழே

மருவியகற் காலந்தலை யெடுத்த தமிழே வடதிசையில் நின்றே வடமொழிதான் முன்றே

கடவஇங்கே வந்தைஎன்றார் கட்டியுரைத் தொன்றே

3

செம்மையாய்ச் செம்பொன் எழுந்திருந்த தமிழே சீரியநல் லிரும்பில் தவழ்ந்தூர்ந்த தமிழே

சீனநிலம் நின்றே சிறந்துவந்தாய் என்றே

மானமொழி நூலறியார் மயங்கிவிட்டார் பின்றே

9