உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இசைத்தமிழ்க் கலம்பகம்

4

திண்ணியோர் காதல்மறம் நின்ற தமிழே

தெரிந்ததிரு முனிவருளம் நடந்த தமிழே நண்ணிலத்தில் நன்றே நண்ணுகடல் நின்றே

எண்ணியிங்கே வந்தையென இயம்புபவர் உண்டே

5

பாண்டியன் கழகம் மகிழ்ந்தோடு தமிழே

பாணரது வாயிலே பண்பாடு தமிழே பிரித்தானியம் நின்றே பெயர்ந்து வந்தாய் என்றே பொருத்தமின்றி யுண்மையெனப் புகன்றவரும் உண்டே

6

தாண்டியே கூத்தர்வயின் ஆடு தமிழே

தலைக்கழகம் முழுவளர்ச்சி யடைந்த தமிழே இருண்டகண்டம் நின்றே இங்குவந்தாய் என்றே தெருண்டறியார் தம்மனத்தின் திரிபுரைத்தார் இன்றே.

7

பலதிசை சென்றுமிகத் திரிந்த தமிழே

பற்பலவாம் சேய்களையும் பெற்ற தமிழே

பலதிசையி னின்றே பற்பலகால் வந்தே

கலவிநின்றா யென்றுரைக்குங் கரியகண்டர் உண்டே

8

என்றுமே இளமைநிலை கொண்ட தமிழே

இறைவனெனப் பலமொழிப்பின் எஞ்சுந் தமிழே

உலகமெல்லாம் இன்றே ஒன்றுசேர நன்றே

உறுதுணைசெய் உன்முதிய உறவுகொண்டு நின்றே.