உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

45. வடமொழியால் தமிழுக்கு வந்தகேடு ‘டம்பனவன் வீடேலம்' என்ற மெட்டு வகை

1

வடமொழியாற் செந்தமிழ்க்கே வந்தகேட்டைச் சொல்வேன் மடமையற முந்தவற்றை நின்றுகேட்டுச் செல்வீர்.

2

நூலழிவு கலையழிவு நுவலும்மொழி யிழிவு மேலும்மொழி வளராமை மெய்வரலாற் றழிவு.

3

சொல்லிழிபு சொன்மறைவு சொல்லின்வழக் கழிவு சொற்பொருளின் மாற்றமொடு சோர்வுபின்னே யொழிவு.

4

தூயபல தென்சொல்வட சொல்லெனவே தோற்ற ஆயினசொல் வந்தவழி ஐயமொடு மாற்றம்.

5

தமிழ்வளமும் தூய்மையும்போய்த் தன்மைகெட்ட தாலே தமிழனுக்கும் வறுமைவந்து தாழ்வுமுட்டு மேலே.

6

தமிழனுக்கே முன்பிருந்த தாய்மொழியிற் பற்றே குமரிமலை சென்றதெனக் குன்றியேபோ யிற்றே.

7

வடமொழியைத் தேவமொழி யென்றுமிக நம்பி

தடமொழியைத் தாழ்த்திவிட்டான் தமிழனே திரும்பி.

39