உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

பண்

55

2

பேதைமையா லும்மதப் பித்தத்தினா லும்இனப் பிரிவினை யாலும்கெட்டுத் தாழ்ந்த பின்னே மேதகை தமிழனே மீண்டும்பெற வள்ளுவன்

மேலாம் வழிவகுத்தான் சூழ்ந்து முன்னே

3

தென்முது நூலெல்லாம் வடமொழிப் பெயர்ந்தபின்

தென்னவர் மடமையால் தீர்ந்தனவே இந்நிலை வடமொழி யிருக்கின்ற நூலெல்லாம்

ஏனையர் நூலெனத் தோன்றுபவே

(நாவலந்)

(நாவலந்)

63. குமரிநாட்டுச் சிவன் மால் வழிபாடு

(தன்னியாசி)

தாளம் - முன்னை

கனகசபாபதி தரிசனம் ஒருநாள்' என்ற மெட்டுவகை

ப.

குமரிநாடே முதலிற் குறிஞ்சி முல்லை நிலத்தே

குமரன் மால் வழிபாடாம்.

து. ப.

தமிழன்மதம் இவையே தகுமொரு சான்றிதுவே அமையும் இதை யறியாராயினே கழி கேடாம்

9.1

சமயம்என்னும் சொல்லையும் சமற்கிருதமே என்பார் சாய்ந்துபின் வேறென் சொல்லார்

(குமரி)

சமைஎன்னும் முதலையும் அமைஎன்னும் அடியையும் அமைய நோக்கியே பாரும் அம்என்னும் அடிவேரும்

(குமரி)

2

வேள்வி வணக்கமதே ஆரிய மதமென்று

கேள்வி மறையே புகலும்

ஆள்வினைத் தமிழரும் ஆற்றிய பூசனைகள்

ஆரிய மொழியேனும் ஆமோ தெய்வம் அயலும்

(குமரி)