உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து =

இழு – இழுகு – இழுக்கு - இழுக்கம். இழுதல் = கால் பின்னுக்குத் தவறல், தவறல், மையால் கோடிழுத்தல். இழுக்கு = குற்றம். "இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே'

(குறள். 415)

இழுகு இசகு – பிசகு. இசகல் = நரம்பு இழுத்துக்கொள்ளல். பிசகல் நரம்பு அல்லது கை கால் முதலிய உறுப்புகள் தவறி யிழுத்துக்கொள்ளல். பிசகு = தவறு.

=

எழுது. எழுதுதல் கோடிழுத்துப் படம் வரைதல்,

இழு - (இழுது) எழுத்தெழுதுதல். படம் எழுது என்னும் வழக்கை நோக்குக.

எழுது – எழுத்து. எழுதுதல் = படம் போன்ற அரிவரியெழுதல்.

இழுகு இலகு இலக்கு - இலக்கம். இலக்கு - இலக்கி.

இலக்குதல், இலக்கித்தல் = எழுதுதல்.

"இவ் வுருவு நெஞ்சென்னுங் கிழியின் மேலிருந் திலக்கித்து” (சீவக.180) இலக்கு + இயம் = இலக்கியம். இலக்கு + அணம் = இலக்கணம்.

Cf. E. literature, from letter, E. grammar, from L.,Gk. gramma, a letter.

இலக்கணம் என்னும் சொல்லே வடமொழியில் லக்ஷண என்று திரியும். இதற்கு மாறாக, மகன் தந்தையைப் பெற்றான் என்பதுபோல, லக்ஷணம் என்னும் வடசொல்லே தமிழில் இலக்கணம் எனத் திரிந்தது என்று பல்கலைக்கழக அகராதியிற் குறித்திருப்பதும், இவ் வுலகிலேயே இலக்கண வரம்பும் வளர்ச்சியும் மிக்குப் பிறமொழிகட்கெல்லா மில்லாத பொருளிலக்கணம் பெற்றதென்று பாராட்டப்படும் தமிழுக்கு இலக்கணத்தைக் குறிக்க ஒரு சொல்லு மில்லையென்று தமிழ்ப் பகைவரான அயலார் கூறுவதை, ஆராய்ச்சியும் உரிமையுணர்ச்சியு மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தமிழ்ப் புலவர் நம்பிக்கொண்டு அடங்கியிருப்ப தும் விந்தையிலும் விந்தையே.

இலக்கு (எழுது ) என்னும் சொல் வடமொழியிலும் இந்தியிலும் லேக் என்று இலக்கணப் போலியாய்த் திரியும்.

நெருக்கம்

இரை திரை. திரைத்தல் = இழுத்தல். வேட்டியை முழங்காலுக்குமேல் இழுத்துக்கட்டுவதைத் திரைத்துக்கட்டுதல் என்பது இன்றும் தென்னாட்டு

வழக்கு.

திரைதல் = இழுத்தல், சுருங்குதல், திரளுதல், திரிதல், திருகுதல். திரை திரங்கு = சுருங்கு. திரை - திர – திரள் - திரளை - திண்ணை – = திணை. திணை

= திரட்சி, குழு, பிரிவு, குலம், ஒழுக்கம்.

ஒ.நோ: குழு = திரட்சி, கூட்டம்.

திர – திரம் – திறம் - திடம் = திரட்சி, உறுதி. திர - திரு = திரட்டப்படும் செல்வம். திடம் - திடல் = திரண்ட மேடு. திணை - திண் திண் – திண்டு – திட்டு

-

=