உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

திட்டை

திட்டம் = உறுதி, உறுதியான ஏற்பாடு. திண்- திணி - திண்- திணுகு திணுங்கு. திணி – தின் - தீனி. திண் - L. densus, E. dense. திண்

தில். திண்டுமுண்டு = தில்லுமுல்லு.

-

21

திள்-

-

திரி = திரிக்கப்பட்டது, பேரிழை, இழை. திரிதல் = அலைதல், அலை போல் இடம்பெயரல். திரித்தல் - அலைபோற் புரளும்படி உருட்டித் திரட்டுதல், மாற்றுதல், ஒரு சொல்லை மாற்றி வேறொரு சொல் பிறப்பித்தல்.

Cf. E. thread, lit. something twisted. Ice. thrad-r, Ger. draht; A.S. throed; from thrawan, to wind.'Thra'என்னும் பகுதி திரி என்னும் சொல்லைச் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருப்பதையும், திரி என்பதன் மறுபெயரான புரி என்னுஞ் சொல் வளைவுப்பொருள்பற்றியதையும் நோக்குக. திரித்த சொல் திரிசொல்.

திரி - L.derivo; E. derive.

திரி – திருகு – திருக்கு. E. trick; O.F. tricer; to beguile. திருக்கு முறுக்கு, வஞ்சனை, வலக்காரம் (தந்திரம்). திரி – திரம்பு – திறம்பு.

இழுத்தற் பொருளுள்ள திரை என்னும் சொல் மேலையாரிய மொழிகளில் பின்வருமாறு திரியும்.

L. traho, Ger. tragen, Dut. trekken. Ice. drug, A.S. dragan, E. draw.

Dragan, traho என்னும் வடிவங்களினின்று draft, drag, draggle, drain, draught, draughts, draw, drawee, drawer, drawl, dray, dredge, dregs, trace, track, tract, trail, train, trait, trawl, treachery, treat, tret, trigger, troll முதலிய ஏராளமான ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். மேசையின் இழுவை drawer எனப்படுவதையும், இழுத்துக் கட்டி வைத்தாற்போன்ற அரைக்காற்சட்டை drawers எனப்படுவதையும், கோடிழுத்து வரைதல் drawing எனப்படுவதையும் நோக்குக.

பின்மை

திரும்

திரும்பு. திருமல் = முன்சென்றவன் பின்னுக்கு வரல். திரும் L. tornare; Fr. tourner; Ger. turnen; A.S. tyrman, to turn, E. turn. திருமி- திரி L.re (pfx); E. re, back. திருமியும் - திரியும் (கொச்சை வழக்கு).

திரும் -திருத்து. திருந்தல் = நெறியைவிட்டு விலகினவன் திரும்ப நெறிக்கு வருதல்.

ஈ-e-மீள்- மீள - மீளவும். மீள் - மீண்டு - மீண்டும். மீள்- மீட்டு - மீட்டும். மீள் - மீட்பு.

நீ - நீங்கு. நீத்தல் ஒரு பொருளைப் பின்னுக்கு விட்டுவிட்டுச் செல்லுதல். நீந்து - நீஞ்சு. நீந்தல் கையால் நீரைப் பின்னுக்குத் தள்ளி நீர்நிலையைக் கடத்தல்.

=

=