உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல் வழுக்கள்

15

தமிழ் வல்லினம் மெல்லினத்திற்கு முன்வரின், எடுப்பொலி பெறும். இதை நோக்காது, வடமொழி வல்லினவொலிவகை நான்கனுள் முதல்வகையென்றே கருதிக்கொண்டு, தமிழ் வல்லின மெய்களை ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்த் திருப்பது, தமிழுக்கு மாறானதும் அயல்நாட்டார்க்குத் தவறான வழி காட்டுவது மாகும்.

எ-டு: தமிழ்ச்சொல்

அங்கு

அஞ்சு

அண்டு

அந்து

அம்பு

ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்க்கப்பட்டுள்ள முறை

anku

anchu

antu

anthu

ampu

இருக்கவேண்டிய

முறை

angu

anju

andu

andu

ambu

ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த, ம்ப்ப, என்னும் வன்கூட்டொலிகள்

தெலுங்கிலன்றித் தமிழிலில்லை.