உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழிச் சென்ற தென்சொற்கள்

3

அரசுகட்கெல்லாம் முந்திய கிரேக்க சரித்திரம் கி.மு. 3000ஆம் ஆண்டி னின்று தொடங்குகின்றது. ஆகவே, சமற்கிருத ஆரியர் வட இந்தியாவிற் குடியேறினதும் அதே காலமாய்த்தா னிருக்கவேண்டும்.

உலகில் முதன்முதல் உண்டானது தமிழ். தமிழர் (கி.மு. 8000) குமரிநாட்டினின்றும் வடக்கே போய்ச் சின்ன ஆசியாவில் குடியேறினர் என்பது பாபிலோனியக் குகை வெட்டாலும் குழி வெட்டாலும் தெரிய வருகின்றது. அங்கேதான் தமிழ் சேமியக் (Semitic) கிளையாகத் திரிந்தது. எபிரேயம் (Hebrew), அரபி (Arabic) முதலியன சேமியக் கிளை மொழிகள். அவற்றையடுத்து Latin, Greek முதலிய ஆரியக் கிளை மொழிகள் பிறந்தன. ஒரு தாய்மொழியினின்றும் ஒரு கிளைமொழி உண்டாயிருப்பின் அதன் இன்றியமையாத முதற் சொற்களெல்லாம் தாய்மொழியா யிருக்கும். ஏனையவெல்லாம் அதற்குச் சொந்தமான ஆக்கச் சொற்களே. அவற்றுள் ஒரு பகுதி பிறமொழிகளினின்றும் கடன்கொண்ட திசைச்சொற்களா யிருக்கும். ஒரு மொழியின் ஆக்கச்சொற் பெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் காரணம் அம் மொழியை வழங்கும் மக்களறிவே யாகும்.

ரியக் கிளைகளில் ஒன்றாகிய Teutonic என்பது Greko-Latin என்ற பெருங்கிளையினின்றும் கிளைத்தபொழுதே (அதாவது சமற்கிருத ஆரியர் இந்தியாவுக்கு வருமுன்னமே) அதில் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் கலந்திருந்தன. ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து தமிழ ரோடு (கி.மு. 2500) கலந்தபின் எண்ணிறந்த தென்சொற்கள் வடமொழியிற் கலந்தன. ஆரியர் வருமுன்னும் வந்தபொழுதும் வடஇந்தியாவில் வழங்கிவந்தவை யெல்லாம் கொடுந்தமிழ் மொழிகளே.

ஆரிய வருகைக்கு முன் சமற்கிருதத்தில் அல்லது Teutonic மொழிகளிற் கலந்திருந்த தென்சொற்களிற் சில:

Sanskrit

Tamil

அரத்தம், இரத்தம்

அரசன்

அகம்

ஆன்மா

இலக்கம்

English

red

ரக்தம்

Rajah

ராஜா

Gk. eikos, house animos

lakh

ஆசயம்

ஆத்மா

லக்ஷம்

உதகம்

எட்டு

water

eight

உதகம்

அஷ்டம்

கோடி

crore

கோட்டி

சக்கரம்

circle

சக்கரம்

சக்கரை

saccharine

சர்க்கரை

சின்னம்

signum

சின்னம்

தரை

terra

தரா

தரு

tree

தரு