உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

தென்சொற் கட்டுரைகள்

இனி, ஒரு சார் வடநூல்வழித் தமிழாசிரியர், “ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்” என்னும் பனம்பாரனார் கூற்றையும்,

ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென்

றோதிய புலவனு முளனொரு வகையால்

இந்திரன் எட்டாம் வேற்றுமை யென்றனன்”

என்னும் (பேரகத்திய நூற்பாவாகக் காட்டப்பெறும்) ஒரு பழைய உரையாசிரியர் மேற்கோளையும்,

"வேற்றுமை தாமே ஏழென மொழிப”

விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே”

(546)

(547)

என்னும் தொல்காப்பிய நூற்பாக்களையும், ஒருங்கு நோக்கி, தொல் காப்பியத்திற்கு முதல் நூல் ஐந்திரமெனக் கூறித் தமிழ்நூற்கு வடநூல் மூலங் காட்ட முயல்வர். "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்பது, தொல் காப்பியரின் ஐந்திர அறிவை மட்டும் குறிக்குமேயன்றி, தமிழிலக்கண நூல் வடமொழியிலக்கண நூல்வழிப்பட்டதென்பதைக் காட்டாது. ஆரியம் கருக்கொள்ளு முன்னரே தமிழ் குமரிக்கண்டத்தில் முழுவளர்ச்சி யடைந் திருந்ததையும், ஆரியமொழிக்குத் தமிழே அடிப்படையா யிருத்தலையும் நோக்கும்போது, தமிழிலக்கணம் வடமொழி யிலக்கண வழிப்பட்ட தென்பது பேரன் பாட்டனைப் பெற்றானென்ற கதையாகவே முடியும். சித்தரஞ்சன் புகைவண்டித் தொழிற்சாலையில் சிறந்த வகையில் சூழ்ச்சியம் (Engine) செய்யப் பெறினும் அதைச் சென்ற நூற்றாண்டிற் புதுப்புனைந்தவர் சியார்சு தீபன்சன் (George Stephenson) என்னும் ஆங்கிலேயர் என்பதை எவர் மறுக்க வொண்ணும்? அதுபோன்றதே தமிழிலக்கண முன்மையும் என்க.

விளிவேற்றுமை என்பது உண்மையில் எழுவாயின் வேறொரு வடிவே யாதலால், அதை முதல் வேற்றுமையுள் அடக்கி வேற்றுமை ஏழெனவே தமிழ் முதனூலார் கொண்டிருக்கலாம். பின்னூலார் அதை எட்டாக்கி யிருக்கின்றனர். இதையே இந்திரனும் தழுவியிருக்கின்றனன் பாணினியார் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவரேனும், விளிவேற்று மையை அட்டமீ (அஷ்டமீ) விபக்தி யென்னாது சம்போதனப் பிரதமா விபக்தியென்பது எழுவாய் வேற்றுமையிலேயே அடக்கியிருக்கின்றனர். எந்நாட்டிலும் தன்னாட்டாசிரியர்க்குள்ளேயே பொருட் பிரிவுபற்றிக் கருத்து வேறுபாடிருப்பது இயல்பே. சிறுபொழுது ஐந்தென்றும் ஆறென்றும், புறத்திணை ஏழென்றும் பன்னிரண்டென்றும், தமிழத் தமிழாசிரியரே மாறுபடுதல் காண்க.

இனி, எழுத்துகளின் பிறப்பு முறை பற்றித் தொல்காப்பியமும் பாணினி சிட்சையும் கூறுவது ஒன்றாயிருத்தல்பற்றி, முன்னதைப் பின்னதன்