உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம்

இலக்கணம்

135

வழிநூலாகக் கருதி, தொல்காப்பியர் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டென்பர் வடமொழி வரலாற்றாசிரியர் பண்டாரகர் (Dr.) சுப்பிரமணிய சாத்திரியார்.

அகத்தியம், மாபுராணம், பூதபுராணம், அவிநயம், தொல்காப்பியம், காக்கைபாடினியம், நற்றத்தம், பனம்பாரம், வாய்ப்பியம் முதலிய பல தமிழிலக்கண நூல்கள், பாணினீயத்திற்குப் பல சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவை. அகத்தியத்திற்கு முந்திய முழுத் தூய தமிழிலக்கணங்களோ எத்தனையோ பல. ஆதலால் பாணினீயமாயினும் பாணினி சிட்சையாயி னும், பிற வடமொழி இலக்கணநூல் எதுவாயினும், தமிழ்நூலை முதல் நூலாகக் கொண்டதே அல்லது பின்பற்றியதே என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. வேத ஆரியர் காலத்தில் வடஇந்திய மக்களும் பெரும்பாலும் திரவிடரா யிருந்ததனால், அவருட் கற்றோரிடைத் தமிழ்நூல்களும் வழங்கி யிருத்தல் வேண்டும். ஆதலால், சிந்தாற்றங் கரையிற் செய்யப்பட்ட வேதத்தில் கலந்துள்ள திரவிட அல்லது தமிழவருடொலிகள் (Linguals or Cerebrals) பர். சுப்பிரமணிய சாத்தியார் கருதுகிறபடி, ஆரியமொழிக் குரியவாகா.

வடமொழி யொலிகளின் வன்மையும் பெருக்கமும் கலவையும், குறில் நெடில் அளபெடை யென்னும் மூவகை உயிர்ப் பகுப்பும், குணம் விருத்தியென்னும் உயிர்த் திரிபும், இருமை யெண்ணும், ஈறு பற்றிய செயற்கைப்பாலும், இடுகுறி (ரூடி) என்னும் சொல்வகையும், வேர்ச் சொல்லாகக் காட்டப்படுபவற்றின திரிசொற்றன்மையும், பிறவும் வட மொழியின் திரிநிலையையும் அம் மொழி யிலக்கணத்தின் பின்மையையும் காட்டப் போதிய சான்றாம்.

“தென்மொழி"