உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப் பூதம் அடக்கமெழும்புதல்

137

சமற்கிருதம் தமிழ்நாட்டிற்குத் தேவையல்லாதது மட்டுமன்றி, தமிழுக்குத் தொடக்கந்தொட்டு உயிர்ப்பகையாகவும் இருந்துவருகின்றது. அதன் தோற்றமே தமிழுக்கு மாறாக ஏற்பட்டதே. தமிழை வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளியதும் தாழ்த்தியதும் சமற்கிருதமே. தமிழ்ச் சொற்களை இழிவுபடுத்தியும் வழக்கு வீழ்த்தியும் இறந்துபடச் செய்தும் தமிழின் தூய்மை குலையவும் வளங்குன்றவும் செய்தவை, அதில் தேவை யின்றிப் புகுத்தப்பட்ட சமற்கிருதச் சொற்களே. ஆரிய வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகத் தூய தமிழ்நூல்க ளெல்லாவற்றையும் அழித்ததும் சமற் கிருதமே. மேலையர் திங்களும் வெள்ளியுங் குடிபுகவிருக்கும் இக்காலத்தி லும், தமிழரைப் பகுத்தறிவும் தன்மானமும் நெஞ்சுரமும் அற்ற அடிமைய ராகவும் அஃறிணையாகவும் அமைத்து வைத்திருப்பது சமற்கிருதமே. ஆதலால், சமற்கிருதக் கல்வி தமிழ மாணவர்க்கு எத்துணையும் வேண்டுவ தன்று. பிராமணர் தம் பிள்ளைகட்கு வேண்டு மாயின் தம் சொந்தச் செலவில் அல்லது தம் இனச் செலவில் தனியாகச் சமற்கிருதப் பள்ளிகளை ஊர்தொறும் தெருத்தொறும் இல்லந்தொறும் அமைத்துக்கொள்ளலாம்.

மேனாடாயினும் கீழ்நாடாயினும், சமற்கிருதத்தைப் பல்கலைக் கழகங்களில் தலைமையாகப் போற்றிக் கற்பிப்பதற்குத் தமிழின் பெருமை யையும் சமற்கிருதத்தின் உண்மையான வரலாற்றையும் அறியாமையே கரணியமாம். குமரிக்கண்டத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை வெளிநாட்டார் அறிவராயின், அன்றே சமற்கிருதத்தைத் தாழ்த்தித் தமிழை அரியணை யேற்றுவர் என்பது திண்ணம். வடமொழி வெறியர் மொழி வெறியே வடிவமாக அமைந்தவ ராதலின், பத்தாயிரம் பாடசாலைகளில் வாழ்நாள் மாணவராக விருப்பதில் வியப்பொன்றுமில்லை. வழக்கிறந்த மொழிகளை யும், செயற்கை மொழிகளையும் விரைவாகப் பேசுவார் இன்றும் உலகத்திலிருப்பதால், அரைச் செயற்கையான இலக்கிய நடை மொழியாகிய (Semi-artificial literary dialect) சமற்கிருதத்தை ஐம்பதினாயிரவர் தட்டுத் தடையின்றிப் பேசவல்லார் என்பதிலும் சிறப்பேதுமில்லை.

சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் வோலப்பூக்கு (Volapuk) எசுப்பெராந்தோ (Esperanto), இந்தர்லிங்குவா (Interlingua), நோவியல் (Novial) முதலிய பல செயற்கை மொழிகள் இயற்றப்பட்டன. அவற்றுள் நெடுநாட் பெருவழக்காயிருந்த எசுப்பெராந்தோவைப்பற்றி 'மொழித்தறி' (The Loom of Language) என்னும் மொழிநூலில் வரைந்திருப்பது வருமாறு:

"பன்னாட்டு மன்றத்தின் (League of Nations) பொதுச் செயலகம் (எசுப்பெராந்தியர் கொடுத்த புள்ளிக்கணக்கைச் சார்ந்து) வெளியிட்ட அறிக்கைப்படி, எசுப்பெராந்தோ மூலநூல்கள், மொழிபெயர்ப்புகள், பாடப்