உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

தென்சொற் கட்டுரைகள்

பொத்தகங்கள், பரப்புரைச் சுவடிகள் முதலியன உள்ளிட்டு ஏறத்தாழ நாலாயிரம் வெளியீடுகளைக் கொண்டுள்ளதாகப் பெருமை பாராட்ட முடியும். அஃது அல்பானியாவில் வழிநிலைக் கல்விக்கும் மேல்நிலைக் கல்விக்கும் கட்டாயப் பாடமாயிற்று. சீனத்திற் பீக்கிங் பல்கலைக்கழகம் சில கடவைகளை (Courses) ஏற்படுத்திற்று. மாதிரிதும் இலிசுபனும் பல செருமனிய நகரங்களும் அதை ஊர்க்காவற் பள்ளிகளின் பாடப் பட்டியிற் சேர்த்தன. பெரும் பிரித்தானத்தில் (Great Britain) அது தொழிலாளர் கல்லூரிகளில் மக்கள் விருப்பைப் பெற்றது. பிரைசு பெருமகனார், எச்சு, சீ. வெல்சு (H.G. Wells). இராபெர்ட்டு செசில் பெருமகனார், ஆர்தர் என்றெர்சன் போன்ற எழுத்தாளரும் அதை ஊக்கினர். இரசியாவில் பொதுமக்கள் கல்வித் திணைக்களம், 1919 சனுவரியில் அதன் தகுதிகளை ஆயவும், ஒரு பன்னாட்டுப் பொதுமொழியைச் சோவியத்துப் பள்ளிகளிற் கற்பிப்பதின் பொருத்தத்தைப்பற்றி அறிக்கை விடவும், ஒரு குழுவை அமர்த்திற்று. சினோசியேவ் இடோ (Ido) மொழியை விரும்பினாரேனும், குழு எசுப்பெராந்தோவைத் தீர்மானித்தது. வேய்மர் மக்களாட்சியில், ஐந்து செருமனிய நகரங்கள் எசுப்பெராந்தோவைத் தொடக்கப் பள்ளிகளிற் கட்டாயப் பாடமாக்கின. லீபுசிக்கு நகரத்தில் ஆசிரியரைப் பயிற்றுவதற்கு ஏற்பட்ட தேசிய எசுப்பெராந்தோக் களரி, உள்நாட்டு மந்திரியாரிடமிருந்து அதிகாரமுறை யொப்புதலைப் பெற்றது. 1921-22 மாரியில், செருமனியில், ஏறத்தாழ 40,000 இளந்தையர்க்கு 1592 கடவைகள் இருந்தன. அவருட் பாதிப்பேர் பாட்டாளி மக்கள்." (பக். 461-2)

இங்ஙனம் ஒரு வகுப்பிற்கும் சிறப்பாக வுரியதல்லாத புதுச் செயற்கைமொழி, 1935 சூன் 8-ல் செருமனியத் தேசியக் கூட்டுடைமைக் கல்வியமைச்சர், அந் நாளுக்குப்பின் மூன்றாம் அரசில் எசுப்பெராந் தோவைக் கற்பிப்பது சட்ட முரணானதென்று தீர்ப்புச் செய்யும் வரை, ஐரோப்பாவிலும், இங்கிலாந்திலும், சீனாவிலும் பரவியிருந்திருக்குமாயின், தமிழரும், திரவிடரும் பிறருமாகிய பழங்குடி மக்களை யெல்லாம் பிராமணர்க்கு என்றும் அடிமைப்படுத்துதற்கென்றே ஆக்கப்பட்ட சமற்கிருதத்தை, அதன் வாயிலாக மேனத்தாக வாழும் ஒரு வகுப்பாருள் ஒரு பகுதியினர் அதை வாழ்நாள் முழுதுங் கற்று வாய்த்திறமையாகப் பேசுகின்றனரெனின், அஃது இறும்பூது விளைத்தற்கு எள்ளளவும் இடமுண்டோ?

சிவமதமும் திருமால் மதமும் தூய தமிழ மதங்களாதலின் கோயில் வழிபாடோ இருவகைக் குடும்பச் சடங்குகளோ ஆற்றுதற்குப் பிராமணியப் பூசாரியரும் வேண்டியதில்லை; சமற்கிருத நடைமொழியும் வேண்டிய தில்லை. இன்று தாழ்த்தப்பட்டுள்ள தமிழ்மக்கள் போன்றே தாழ்த்தப்படாத தமிழரும் பண்டு தமிழ உவச்சரைக் கொண்டு தமிழிலேயே இறை வழிபாட்டையும் இருவகைச் சடங்குகளையும் புரிந்து வந்தனர். பிராமணர்