உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப் பூதம் அடக்கமெழும்புதல்

139

தாம் நிலத்தேவரென்றும் தம் முன்னோர் மொழியும் செயற்கை மொழியும் தேவமொழியென்றும் ஏமாற்றியதினாலேயே அரசருங் குடிகளுமான இடைக்காலத்துப் பழங்குடி மக்கள் ஏமாறி நம்பி ஆரியத்தை யேற்றுப் போற்றி வந்தனரென்றும், வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் மிக்க இக்காலத்திற்கு அவ் வேமாற்று இம்மியும் ஏற்காதென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.

இனி, அறியாமைக் குப்பைகளும் இடக்கர்ச் செய்திகளும் மூடப் பழக்கவழக்க வண்ணனைகளும் பொய்புரட்டுகளும் மலிந்த இதிகாச புராணங்களும், தரும சாத்திரம் என்னும் தீய வொழுக்க நூல்களும் தவிர, மற்றச் சமற்கிருத அறிவியல் நூல்கட்கெல்லாம் மூலம் ஆரியத்தால் அழியுண்டுபோன தமிழ் நூல்களே என்பதும், தெரிதரு தேற்றமாம்.

6

"இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயம் முதலாவுள்ள தொன் னூல்களிறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்!” என்று அடியார்க்குநல்லாரும் (சிலப்பதிகார வுரைப்பாயிரம்),

“எண்ணென்பது கணிதம். அது கருவியுஞ் செய்கையுமென இருவகைப்படும்; அவை ஏரம்ப முதலிய நூல்களுட் காண்க.” (திருக்குறள், 392, உரை) என்று பரிமேலழகர், கூறியிருத்தலையும், சிறுகுழி பெருங்குழி யென்னும் சதுர வாய்பாடுகள் சென்ற நூற்றாண்டுவரை வழங்கியமையும், எழுகோளும் பன்னீரோரையும் இருபத்தெழு வெள்ளியும் ஆரியர் வருமுன்பே தமிழர் கண்டிருந்தமையையும், வடமொழி நெடுங்கணக்கும் எண்வேற்றுமையும் தமிழைப் பின்பற்றி யுள்ளமையையும், வானளாவப் போற்றிப் புகழப்பெறும் பாணினீயம் (அஷ்டாத்யாயீ) ஐந்திலக்கணமுங் கூறும் தொல்காப்பியம் போலாது நன்னூல்போன்று எழுத்துஞ் சொல்லுமே கூறுதலையும், மாந்தன் இதுவரை கண்ட மொழியிலக்கணத்தின் கொடு முடியான பொருளிலக்கணம் பெயரளவிலும் வடமொழியில் இல்லாமை யும், சிறுதெய்வங்களையே வேள்வியில் வழிபட்டுவந்த ஆரியர் தமிழ ரொடும், திரவிடரொடும் தொடர்புகொண்ட பின்னரே கடவுட் கொள்கையை மேற்கொண்டதையும், பிறவற்றையும் தீர எண்ணித் தமிழ ஆரிய நாகரிகங் களின் ஏற்றத்தாழ்வு வெள்ளிடைமலைபோல் விளங்குதல் காண்க. ஆகவே, இந்தியச் சமற்கிருதக் கழகத்தார் இனித் தமிழ் நாடொழிந்த பிற பைதிரங் (பிரதேசங்)களிலேயே சமற்கிருதத்தைப் பரப்பும் வழிகளை வகுக்க.

“தமிழ்நாட்டுப் பெற்றோர் கழகக் கூட்டமொன்று தமிழ்நாட்டு உயர்நிலைப் பள்ளிகளிற் சமற்கிருதக் கல்விக்கு ஏந்துகள் (வசதிகள்)