உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

தென்சொற் கட்டுரைகள் ஏற்படுத்தவும், சமற்கிருத ஆசிரியரின் குறைபாடுகளை நீக்கவும், வழிகள் வகுக்குமாறு இம் மாதம் 23ஆம் பக்கல் கூடுகின்றது” என்னும் அறிவிப்பும், திரு பி.எப்.தேவிசு (P.F.Davis) என்பவரின் சமற்கிருதப் படிப்பு (Sanskrit Studies) – துல்லிபமும் (Precision) தீர்பும் (Finish), அறிவு வளர்க்குந் திறனும் (Educative value) என்னும் தலைப்புக்கொண்ட கட்டுரையும் வெளிவந்தன. அன்று நடைபெற்ற சமற்கிருதக் கல்வி மாநாட்டொடு இக் கட்டுரையைத் தொடர்புபடுத்தி நோக்கும்போது, அம் மாநாட்டு முடிபு வலியுறுமாறு வேண்டுமென்றே இது முற்பட வரையப்பட்டதாகத் தெரிகின்றது. கட்டுரையாளர் சமற்கிருதச் சொல்வளத்தையும் இலக்கியச் சிறப்பையும் எடுத்துக் கூறியதில் எவ்வகைக் குற்றமுமின்று. ஆயின், அம் மொழி யொன்றே அப் பண்புகளையுடைய தென்றும், அதனால் அதன் வாயிலாகவே அச் சிறப்புகளை நுகர்ந் தின்புற முடியுமென்றும் கூறி யிருப்பது, அவரது தமிழறியாமையைக் காட்டுவதுடன், பிறரையும் அவ் வறியாமைக்குட் புகுத்துவதாயிருக்கின்றது.

சடமும் (Matter) ஆவியும் (Spirit) இசைவுற வளர்ச்சிபெறல்

சடத்தையும் ஆவியையும் இசைவுற வளர்த்தலைச் சமற்கிருத இலக்கியத்தில்தான் காணமுடியுமென்பது கட்டுரையாளர் கருத்து.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்”,

(குறள். 2)

அன்பிலா ரெல்லாந் தமக்குரியர் அன்புடையார்

என்பு முரியர் பிறர்க்கு”,

(குறள். 72)

இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண

ந ன்னயஞ் செய்து விடல்”,

(குறள். 314)

‘பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு'

55

(குறள். 350)

என்ற திருவள்ளுவரே,

ce

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்

கிவ்வுலக மில்லாகி யாங்கு",

(குறள் 247)

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்”,

(குறள். 751)

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்”,

(குறள். 479)

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்”

(குறள். 1046)

என்றுங் கூறியிருத்தல் காண்க.