உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப் பூதம் அடக்கமெழும்புதல்

சொற்சுருக்கம்

141

'சுருங்கச் சொல்லல்' என்பது தமிழ் இலக்கண நூல்கட்கெல்லாம் இன்றியமையாத பத்தழகுகளுள் ஒன்றாம்.

எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்

அப்பொரு எல்லாப் பிறிதுபொருள் கூறல்”

அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்”

(518)

(519)

என்று வணிகர்கூடச் சொல்லிலுஞ் செட்டாயிருக்குமாறு தொல்காப்பியம்

நெறியிடுகின்றது.

முன்னத்தின் உணருங் கிளவியும் உளவே

இன்ன என்னுஞ் சொன்முறை யான”

..

'மாத்திரை முதலா அடிநிலை காறும்

(942)

நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே”

என்பனவும் சொற்சுருக்கம் பற்றிய அந் நூல் நூற்பாக்களே.

'பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல்”

(1361)

(குறள். 196)

என்றார் திருவள்ளுவர். சொற்சுருக்கம் பற்றியே அவர்தம் நூற்குக் குறள்வெண்பா யாப்பைத் தெரிந்துகொண்டார். வடநூலார் சூத்திர யாப்பை மேற்கொண்டதும் தமிழ் நூலாரைப் பின்பற்றியே. பாணினியின் அளவிறந்த சொற்சுருக்கம் குன்றக் கூறல் என்னுங் குற்றந் தங்குவதாகும். ஆதலால், சமற்கிருத இலக்கியமே சொற் சுருக்கத்திற் சிறந்ததென்று கட்டுரையாளர் கூறியிருப்பது பொருந்தாது.

துல்லிபம்

ஒரு சொல் துல்லிபமாய் ஆளப்பெறுவதற்கு நுண்பொருள் வேறுபாடு கொண்ட ஒருபொருட் பல சொற்கள் இன்றியமையாதனவாம். இவ்வகைச் சொல்வளத்தில் தலைசிறந்தது தமிழே. தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டு பரந்திருந்த பாண்டி நாட்டொடு அதில் வழங்கிய ஆயிரக்கணக்கான உலகவழக்குச் சிறப்புச் சொற்கள் முழுகிப்போன பின்பும், முதலிரு கழகமும் இயற்றிய ஆயிரக்கணக்கான தூய பல்துறை நூல்களொடு அவற்றில் ஆளப்பெற்ற ஆயிரக்கணக்கான இலக்கிய வழக்குச் சிறப்புச் சொற்கள் இறந்துபட்ட பின்பும், இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலை வேறுபாடும்; அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐவகைப் பூ வேறுபாடும்; பிருக்கு, பிஞ்சு, காய், பழம் (கனி), வற்றல் (நெற்று) என்னும் ஐவகைக் காய்வேறுபாடும்; கச்சல் (வாழை), வடு (மா), மூசு (பலா) என்னும் மூவகைப் பிஞ்சு வேறுபாடும்; இவைபோன்ற பிறவும், இன்றும் தமிழிலன்றி வேறெம் மொழியிற் காணமுடியும்?