உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அபிமானி

=

மானம்-மாணம்

ஒரு பொருளை மதிப்பவன்

தென்சொற் கட்டுரைகள்

பரிமாணம்-அளவு

பிரமாணம்-அளவு, அளவை, அளவையாலறியும் உண்மைப் பொருள், உண்மையாகக் கூறும் ஆணை.

பிரமாணத்தா லறியப்படுவது பிரமேயம்.

அநு, அவ, உப, சன், அபி, பரி, பிர என்பன பொருள் உள்ளவும் இல்லவுமான உபசர்க்கங்கள்.

பெறுமானம் முதலிய மூன்று சொற்களில் மானம் தொழிற்பெயர் விகுதியாகவுங் கொள்ளப்படும்.

inn

=

அந்தப்புரம். அந்தர்+புரம். அந்தர்-inter. இல் (= உள்) என்னும் சொல் ஆரியமொழிகளில் in என்று திரியும். cf. இல் (= வீடு) சத்திரம். in என்பதின் உறழ்தரம் (Comparative degree) inter என்பது. inter -அந்தர். அந்தர்ப்புரம்-அந்தப்புரம்-நிலைமொழி யீறுகெட்டது.

புரம்: புரி + அம் = புரம், தொழிற்பெயர். புரிதல் = வளைதல்.

புரி-spire. புரம்=கோட்டை. வளைந்திருப்பது, தொழிலாகு பெயர். cf. கோட்டம் from கோடு = வளை.

+

கோடு கோடு +

அம் = கோட்டம்.

=

ஐ கோட்டை.

=

கோட்டம்-Caster, (Eng) கோஷ்டகம் (Skt.) பண்டைக் காலத்தில் ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு கோட்டையாற் சூழப்பட்டிருந்தது. அதனாற் புரம் அல்லது கோட்டையென்று கூறப்பட்டது.

திரிசிரபுரம். பீஜபுரம்-பீஜப்பூர்.

புரி - முதனிலைத் தொழிலாகு பெயர்.

புரம் - borough, berg, burgh - Edinburgh.

புரி - bery, pury, bury – Canterbury.

கோட்டை

caster. நால்வாசங் கோட்டை, பாளையங்கோட்டை.

Lancaster, Doncaster.

புரம்-அரண்மனை, கோட்டையாற் சூழப்பட்டது.

cf. நகர்-a town or a palace.

அந்தப்புரம்-உள் அரண்மனை.

புரி என்னும் தென்சொல் புரீ என வடசொல்லாகுமே யன்றிப் புரீ என்னும் வடசொல் புரி எனத் தென்சொல்லாகாது. இகர வீற்றுத் தென்சொற்கள் வடமொழியில் ஈகாரவீறு பெறும்.