உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தென்சொற் கட்டுரைகள்

மொழிக்கும் பொதுவான சொற்களுள், தமிழில் மூலப்பொருள் தருவன வெல்லாம் தமிழென்றே பெரும்பாலுங் கொள்ளற்பாலன. சமற்கிருதம் என்னும் பெயரே ‘நன்றாய்ச் செய்யப்பட்டது' என்று பொருள்படுதலின் சமற்கிருதத்தின் செயற்கையை யுணர்த்தும்.

தமிழிற் பிற்காலத்து வடசொற்கள் பெரிதுங் கலந்திருப்பினும் பண்டைத் தமிழ்நூல்கள் அத்துணைக் கலப்பினவல்ல. காலத்திற் பின்னோக்கிச் செல்லச் செல்லத் தமிழ் நூல்களில் வடசொல் வழக்கு அருகிக் கொண்டே செல்லும். இற்றை முழுத்தமிழ் நூல்களுள் முன்னையது தொல்காப்பியமாதலின் அதில் வந்துள்ள வடசொற்கள் ஆசை, வைசியர் போன்ற ஐந்தாறே யாகும். வடசொல்லென மயங்கும் அதன் பிற சொற்க ளெல்லாம் தூய தென்சொல்லே யாதல் வெள்ளிடைமலை. ஆயினும் ஆராய்ச்சி யில்லார்க்கு அறிவிப்பான் வேண்டி அவற்றை முறையே ஒவ்வொன்றா யெடுத்து மொழிநூற்படி விளக்குவாம். படிமை

"பல்புகழ் நிறுத்த படிமை யோனே

“மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய

(தொல். பாயிரம்)

(தொல். அகத். 30)

படிமை என்னுஞ் சொல் படி என்னும் வினையடியாகப் பிறந்தது. படி என்பது படு என்பதன் மறுவடிவம். இவ் விரண்டும் பட் என்னும் ஒலிக் குறிப்பினின்றும் தோன்றியவை.

படுதல் = படிதல் = i. வீழ்தல். ii. ஒலித்தல்.

வீழ்தற்பொருளின் அடிப்படையாகப் படி என்பதனின்றும் பல கருத்துகளும் சொற்களும் பிறக்கும்.

படிதல் = 1. விழுதல்: கீழ்த்தங்கல், நிலைபெறுதல், பழகுதல்,

பேசி முடிவாதல். (எ-டு.) விலை படிந்தது.

2. விழுதல். -ஒருவரின் அடிவணங்கல், அடிப்படுதல், கீழ்ப்படிதல், தாழ்மையாயிருத்தல்.

3. விழுதல்: சாய்ந்து அல்லது மடங்கி விழுதல், நிலத்தில் அல்லது உடம்பிற் படுதல்.

(எ-டு.) பயிர் நிலத்திற் படிந்திருக்கிறது.

சடைநாயின் உரோமம் நிலத்திற் படிகிறது.

மயிர் தலையிற் படிந்திருக்கிறது.

பன்றியின் வயிறு நிலத்திற் படிகிறது.

4. விழுதல்: ஒன்றில் ஒன்று விழுந்து அதன் உருவம் அமைதல். படி (பெயர் )

ஒன்றிலொன்று விழுந்ததனாலான உருவம், அதன்

வடிவம், அளவு, மாதிரி, வகை.