உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்

E. Botany, lit. the science of trees.

43

படி - பாடி, a cluster of low-roofed huts, a military encampment. படி = form, image, likeness.

படி + மை = படிமை. மை an abstract noun suffix.

cf. அடி + மை + =

= + மை அடிமை; குடி +

குடிமை.

படிமை- 1. form, image.

2. appearance.

3. robe of an ascetic.

4. religious conduct of an ascetic.

படிமை (பதிமை) -பதுமை.

இகரம் உகரமாய்த் திரிவது பெரும்பான்மை.

(எ-டு) இழிந்தோர் வழக்கு: பிள்ளை-புள்ளை

பிட்டு - புட்டு பிண்ணாக்கு

பிடு - புடு

புண்ணாக்கு

இழிவழக்கேனும் உயர்வழக்கேனும் சொற்றிரிபு விதி ஒன்றே. உயர் வழக்காயின் கொள்ளப்படும்; இழிவழக்காயின் தள்ளப்படும். இதுவே இவை தம்முள் வேற்றுமை.

(எ-டு)

கொள்ளப்படுவன

அ-எ பரு பெரு

ப-வ பதி – வதி

தள்ளப்படுவன

(கத்தரிக்காய்) - கெத்தரிக்காய் (பதில்) - வதில்

படிமை என்னும் சொல்லே வடமொழியில் ப்ரதிமா என்றாகும். வடமொழியில் ப்ரதி என்ற சொற்கு மூலமில்லை. மா என்பது பண்புப்பெயர் விகுதியன்று. ப்ரதிமா, அணிமா, மகிமா முதலிய மாவீற்றுப் பெயர்களை யெல்லாம் பகாப்பதங்களென்றே கொள்ளுவர் வடநூலார்.

வடவெழுத்துத் திரிபைக் கூறுஞ் சூத்திரத்து ‘ஆவீறையும்' என்றார் பவணந்தியார். வடமொழி யாகாரம் தமிழில் ஐகாரமாவது போன்றே, தமிழ் ஐகாரமும் வடமொழியில் ஆகாரமாகும். ஆங்கிலப் பவுன் இந்திய ரூபாவாக மாறினால் இந்திய ரூபாக்களும் ஆங்கிலப் பவுனாக மாறுமன்றோ? அது போன்றே.

எ-டு:

தமிழ்

(சாய்-பகுதி) சாயை (மால்-பகுதி) மாலை

வடமொழி

சாயா

மாலா