உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தென்சொற் கட்டுரைகள்

பலர் ‘ஆவீறையும்' என்பதன் மறுதலையை யுணராது ஐகாரவீற்றுத் தமிழ்ச்சொற்களை யெல்லாம் ‘குர்ரம்' வாய்பாட்டில் ஆகாரவீற்று வடசொற் றிரிபாகக் கொள்ளுவர்.

தென்சொற்களை வடசொற்களாக்கும் முறைகள் பலவுள. அவற்றுள் ப்ரதிமா என்னுஞ் சொல்லிற் கொண்டன மூன்று.

அவையாவன:

1. ப - ப்ர

2. டி - தி (ட தி (ட - த)

3. மை

மா

மொழிமுதன் மெய்யொடு ரகரம் சேர்த்த வளவானே தூய தென் சொற்களையும் வடசொல்லென மயங்குகின்றனர் தமிழறிஞர். இனி வேறுபல மாறுதல் கூடின் அவர் மயங்குதலைச் சொல்லவும் வேண்டுமோ?

“பிறக்கு-பிருதக்கென்னும் வடமொழிச் சிதைவென்க என்றார் அடியார்க்குநல்லார் (சிலப். ப. 162)

பின் - பின்பு, பின்று, பின் - பிறந்து, பிற, பிறகு, பிறக்கு.

இத்துணைத் தெளிவாகப் பிறக்கு என்பதன் மூலமும் பிறவடிவும் தமிழிலிருந்தும் அடியார்க்குநல்லார் அதனை வடசொல்லெனப் பிறழ வுணர்ந்தமைக்கு ஊழ்வினை யல்லது வேறொரு காரணங் கண்டிலம். 'பிறக்கொழிய’ என்பதற்குப் 'பின்னிட்டொழிய' என்று அரும்பதவுரைகள் உரைத்ததையும் அவர் உற்றுநோக்கிலர்.

இனி, படி என்னும் சொல் ஒலித்தற் பொருளில் படித்தலையும் வாசித்தலையும் குறிக்கும்.

படி - to read, to learn, to sing, to memorise.

+

Skt. பட். படி +

அம் = பாடம்.

இதுகாறுங் கூறியவற்றால் படிமை என்பது தென்சொல்லே யென்றும், ப்ரதிமா என்பது அதன் திரிபே என்றும், இருமொழிக்கும் பொதுச்சொற்களை வடிவுபற்றி மயங்காது பகுதிப் பொருளறிந்து இன்ன மொழியெனத் துணிதல் வேண்டுமென்றும் அறிந்து கடைப்பிடிக்க.

“செந்தமிழ்ச் செல்வி" துலை 1936