உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

'இலக்கியம்', 'இலக்கணம்'

வடமொழியும் தென்மொழியும் எனது உனது என்று, எங்குந் தொடர்ந் தெதிர்வழக்காடற் கிடமான எண்ணிறந்த சொற்களுள், 'இலக்கியம்', 'இலக்கணம்' என்பன இரண்டாம்.

உலகில் அடுத்தடுத்து வாழும் மக்கள் தம்முட் கொண்டுங் கொடுத்தும் பொருள்களை மாற்றிக் கொள்வது போலும், அடுத்தடுத்து வாழும் வகுப்பார் அல்லது நாட்டார் தம்முட் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வது போலும், அடுத்தடுத்து வழங்கும் மொழிகளும் தம்முட் கொண்டுங் கொடுத்தும் சொற்களை மாற்றிக்கொள்கின்றன.

இனி, உலகமொழிகளெல்லாம் ஒருதாய் வயிற்றினவென்று மொழி நூல் வல்லார் கண்ட முடிவிற்கேற்ப, அடுத்து வழங்காது நெட்டிடையிட்டு வழங்கும் மொழிகட்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் பொதுவாயிருத்தலை ஆராய்ச்சியாற் காணலாம். ஆங்கிலம் ஏறத்தாழ 6,000 மைல்கட்கப்பால் வழங்கினும் ஆயிரக்கணக்கான தென்சொற்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. இவற்றின் விரிவையெல்லாம் எனது மொழிநூலுட் (Evolution of Language: Vol.1. The Primitive Language and the PreAryan Tamils) கண்டுகொள்க. உதாரணமாகச் சில சொற்களை ஈண்டுக் காட்டுதும்.

Abba – அப்பன்.

All - எல்லாம்.

Alum – அளம் = உப்பு.

Abbot, the father of an abbey. Abbey, a monastery under an abbot.

Alone = All - one, ஒன்று.

Along = A + long, ஒழுங்கு = நீளம்

Angel, a divine messenger.

தபாற்காரனை அஞ்சற்காரன் என்பதும், தபால் ஆபீசை அஞ்சல்

ஆபீசு என்பதும் நெல்லை வழக்கு.

Amiable, amicable, amo - அமர்.

Amour அமர். L. Amor, love.