உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் கொள்ளப்படுதற்கு ஏற்றதே. ழகரத்தைப் போன்றே ளகரமும், கொடுந்தமிழ்களிலும் பிற மொழிகளிலும் சகரவகையாகத் திரிதல்

இயல்பே.

இனிக் கலி, களி, கத்து முதலிய சொற்களுள் ஒன்றன் அடியாகக் கொள்ளின், ‘to roar’, என்ற மொழிப்பொருட் காரணமும் பொருந்தும். கயம் கயவு = கரிக்குருவி, கீழ்மை, மென்மை, பெருமை.

கயம் காயம்

=

கரிய வானம்.

“விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்”

(தொல். எழுத்து. 305)

கயம்-காசம்-ஆகாச (வ.), ‘ஆ’ ஒரு முன்னொட்டு (உபசர்க்கம்). பல்வேறு முன்னொட்டுகளை முற்சேர்த்தல், வடவர் தென்சொற்களை வட சொற்களாக்கும் வகைகளில் ஒன்றாம்.

காயம்-காயா = கரிய மலர்கொண்ட ஒருவகை மரம். காயாம்பூ வண்ணன் = கரிய திருமால்.

காயம்-காயல் = கரிய உப்பங்கழி.

காயல்பட்டினம் என்னும் துறைநகர்ப் பெயரை நோக்குக. கள்-காள்-காளம் = = கருமை, காளமேகம் = கருமேகம்.

காள்-காளி = கரிய மாரியம்மை.

ஒ.நோ: மா-மாயோள் (காளி) = கரியாள்.

மாமை = கருமை.

காளம்-காளான் = கரிய ஆம்பி.

காள + ஆம்பி = காளாம்பி (கருங்காளான்). காள்-காளை = கரிய எருது, எருது.

காள்-காழ், காழ்த்தல் கருத்தல், கருத்து வயிரங் கொள்ளுதல், வேலை செய்து கை வயிரங் கொள்ளுதல், முதிர்தல், கடுத்தல், உறைத்தல். 'காழ்ப்பேறுதல்' என்னும் வழக்கை நோக்குக.

காழ்ப்பு = வயிரம், கைவயிரங் கொள்வதால் ஏற்படும் தழும்பு, உறைப்பு.

காழ் = கருமை, குற்றம், மரவயிரம், கரியவிதை, விதை, விதை போன்ற மணி அல்லது முத்து, முத்தின் ஒளி.

காழ்-காழகம் = கருமை.

காழ்-காய், காய்தல் = வெப்பத்தால் கருகுதல், வெப்பங் கொள்ளுதல், உலர்தல், வெப்பத்தால் எரிதல், எரிதல்போற் சினத்தல்.

=

||

காய்-காய்ச்சு = வெப்பத்தாற் சமை. காய்-காய்ச்சல். காய்த்தல் வேலை செய்து கையில் தழும்பேறல் (கருங்கை, 'கையிற் காய்ப்புக் காய்த்தல்' முதலிய வழக்குகளை நோக்குக.)

வயிரங் கொள்ளுதல், முதிர்தல், மரம் முதிர்ந்து பலன் தருதல்.