உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

காய்ப்பது காய்.

31

காழ் - காசு = கருப்பு, குற்றம், விதைபோன்ற மணி, மணியொத்த பொன், பொன்னால் செய்யப்பட்ட நாணயம்.

காசு -ஆசு = குற்றம்.

Cash என்னும் ஆங்கிலச் சொல்லை முதலாவது பணப்பெட்டியை யும் பின்பு பணத்தையும் குறித்ததாகக் கொண்டு, இத்தாலியத்தில் பெட்டியைக் குறிக்கும் cassa (L.capsa) என்னும் சொல்லடியதாகக் கொள்வதைவிட, காசு என்னும் தமிழ்ச்சொல்லடியதாகக் கொள்வதே பொருத்தமாம்.

காசு E. cash, O.F. casse, Sp., and Pg. caxa.

காய்-காயம் = தழும்பு, தழும்பு விழுப்புண், தழும்புபோன்ற நிலைப்பு, நிலையாத உடல் (மங்கல வழக்கு), எரிகுணம் அல்லது உறைப்புள்ள பொருள் (எ-டு: வெங்காயம், பெருங்காயம்). கள்-(கள்கு)-(கட்கு)-கட்கம் = மறைவான அக்குள்.

ஒ.நோ: வெள்-வெள்கு-வெட்கு-வெட்கம்.

கட்கம்-கக்கம்-கக்ஷ(வ.).

கள்-கடு, கடுத்தல் = எரிதல், கோபித்தல், எரிதல்போல் நோதல், முதிர்தல், மிகுதல், விரைவு மிகுதல்.

கடு = கடிய சுவை, கடிய நஞ்சு, (குருதியைக் கருப்பாக்கும் நஞ்சு எனினுமாம்).

கள்-கம் = மறைவு, மறைவு போன்ற அடக்கம். 'கம் என்றிரு', 'கம் என்றிருக்கிறது’ என்னும் வழக்குகளை நோக்குக.

ஒ.நோ: வள்-வம்-வம்பு, கொள்-கொம்-கொம்பு.

கம்-கமு. கமுக்கூடு = மறைவான அக்குள். கமு-கமுக்கம் மறைவு, அடக்கம்.

கல் கர்

கரு = கருமை. கரு கருப்பு = கருமை, கரிய பேய், கரிய

இருள் போன்ற பஞ்சம்.

கரு

கரு

கரு

கரு

கருத்தை, கரு-கருவல்.

கருப்பை = கரிய எலி, எலி.

ப =

கரும்பு = கரிய தண்டையுடைய பயிர்.

கருப்பு - கருப்பம்

garbha (வ.) = கரிய மேகத்தின் சூல்,

சூல், சூல் போன்ற உட்பொருள்.

கரு - கருகு. கருகுதல் = காய்ந்து அல்லது வறுக்கப்பட்டுக் கருத்தல். கருகு-கருக்கு = கருகச்செய்(வி.), கருகச் செய்து இறக்கிய கஷாயம், பனைமட்டையின் கரிய ஓரம், அதுபோன்ற கூர்மை.

கருக்கு - கருக்கல் = இருண்ட விடியல்.