உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

33

சினக்கும்போது, கருப்பன் முகம் மிகக் கருப்பதும், சிவப்பன் முகம் மிகச் சிவப்பதும் இயல்பு.

கறு கறுவு = நீங்காச் சினம்.

கறு

கறு

கறு

=

கறை கருப்பு, களங்கம், குற்றம், குருதிக்கறை, குருதி.

கறள் = கறை.

கறுக்கன் = கருத்த மட்ட வெள்ளி.

கறு காறு. காறுதல் = கருத்தல், கருத்து வயிரங்கொள்ளுதல், வயிரங்

கொள்ளுதல்.

கள் - கண். ஒ.நோ: பெள் - பெண், கோள் - கோண்.

கண்

கண்ணன் = கரியன், கரிய திருமால்.

ஒ.நோ: மால் = கரியன், மாயோன் = கரியன்.

கிருஷ்ணன்' என்னும் வடசொல் கண்ணன் என்று திரிந்ததென்று கொள்வதைவிட, கள் என்னும் தென்சொல்லே ணகர வீறாய்த் திரிந்து ஈறு பெற்றதென்று கொள்வது சாலச் சிறந்தது. 'கிருஷ்' என்னும் வடசொற் பகுதியும் ‘கரு' என்னும் தென்சொற் பகுதியின் திரிபே.

கண் = கரிய விழி, விழி. கண் – கண்ணவன்

கண்

கணவன்.

கண்ணு - gan (வ.). கண்ணுதல் = அகக்கண்ணாற் காணு தலாகிய கருதுதல், அளவிடுதல்.

கண் + இயம் இயம் = கண்ணியம் - ganya (வ.).

கண்ணியம்

=

சிறப்பாகக் கருதுதல், மதித்தல், மதிப்பு.

கண் + அக்கு = கணக்கு. ‘அக்கு’ ஓர் ஈறு.

கணக்கு - ganaka (வ.) = அளவீடு, எண்ணிக்கை, தொகை, கணிதநூல், நூல், எழுத்து.

கணக்கு - கணக்கன் = கணக்கெழுதுவோன், கணக்கெழுதுவதைக் குலத்தொழிலாகக் கொண்டவன், நூலாசிரியன், ஆசிரியன். கணக்காயர், சமயக்கணக்கர், மேற்கணக்கு, கீழ்க்கணக்கு, நெடுங்கணக்கு முதலிய பண்டை வழக்குகளை நோக்குக.

கண் - கணி - gani (வ.) = மதி, அளவிடு, கணக்கிடு;

(பெ.) கணிப்பவன், சோதிடன்.

கணிகன், கணியான், கணிவன் = சோதிடன்.

கணி - கணியன் = சோதிடன், காலங்கணித்து ஆடுபவன். கணி - கணிகை - ganika (வ.) = காலங்கணித்து ஆடுபவள்.

கணி கணிதம் - ganita (வ.) = மதிப்பு, கணக்கு.

கணிதம் கணிசம்

=

மதிப்பு, நிதானம்.