உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

காண்-காணி. காணித்தல் = மேற்பார்த்தல், காத்தல்.

35

காணிக்கை = கடவுள் காத்தற்கு இடும் படைப்பு அல்லது செலுத்தும் பணம்.

கண் = அறிவு, ஞானம்.

"கள்ளொற்றிக் கண்சாய் பவர்'

(குறள். 927)

காண் - A.S. cunnan, to know; E. cunning, knowing; M.E. con, to study carefully, Goth. kunnan, to know, O.H.G. chann. காண் என்னும் தென்சொல் ‘க்ணா’-‘க்னா’ என்று சில ஆரிய மொழிகளில் மாறியும், 'gna' என்று சில ஆரிய மொழிகளில் மாறித் திரிந்தும், 'ஜ்ஞா' என்று வேத ஆரியத்தில் மேலும் திரிந்தும் வழங்கும். A.S. cnawan; Ice. kna; E. know; L. gna, Gk. gno; Skt. jna; Russ. jna.

பிற்காலத்து ஆங்கிலச் சொற்களில் ‘gna' அடியும் (எ-டு: cognisance, prognosticate, ignorance) முற்காலத்து ஆங்கிலச் சொற்களில் ‘con’ அல்லது ‘kon' அடியும் இருப்பதையும், ஜ்ஞானம் என்னும் சமற் கிருதச் சொல் உட்பட ‘know' என்னும் ஆங்கிலச் சொற்கினமான எல்லா வற்றுக்கும் ‘kon' என்பதையே மூலமாக மேலை மொழிநூலார் குறித் திருப்பதையும், 'காண்' என்னும் தென்சொல்லின் இயல்பையும், அதன் வழிப்பட்ட ஆரியச் சொற்களின் திரிபையும், அவற்றுள் சமற்கிருதச் சொல்லும் ரசியச் சொல்லும் அடைந்துள்ள திரிபின் கோடியையும் உற்று நோக்குக.

தமிழ்க் கண்ணிலிருந்து சமற்கிருதம் ஞானம் பெற்றது என்பது, சொல்லளவிலும் பொருளளவிலும் உண்மையாயிருத்தல் நோக்கத்தக்கது. சொற்குடும்பங்கள்

1. தில் என்பது, பருமனால் ஆகிய திண்மையையும், அதனால் ஏற்படும் வலிமையையும், அதுகொண்டு செய்யப்படும் முரண்டையும் குறிக்கும்.

ஒ.நோ: முரண் = பெருமை, வலிமை, மாறுபாடு. முரண்

- முரடு

=

பருமன், கரடு, வன்குணம். முரண்-முரண்டு = மாறுபாடு, பிடிவாதம், ஏறுமாறு. முரடு-முருடு.

“தில்லுமுல்லு”(ஏறுமாறு, முரண்டு) என்னும் வழக்கை நோக்குக. தில்-திர்-திர-திரம் = திண்ணம், உரம், வலிமை, உறுதி, நிலைவரம், மலை, நிலையான வீடு (முத்தி).

திரம்-ஸ்திர(வ.). திரம் + ஆணி = திராணி.

திர-திரங்கு-திரக்கு. திரங்குதல் = திரண்டு சுருங்குதல், சுருங்குதல். திரக்கு = திரட்சி, கூட்டம், நெருக்கடி.