உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

‘திருவிழாத் திரக்கு’ என்னும் தென்னாட்டு வழக்கை நோக்குக.

திரம் - திரல் - திரள் - திரளை = திரட்சி, உருண்டை.

திரளை – திரணை = திரண்ட மேடை, திண்ணை.

திரள் - திரட்டு. திரள் - திரடு = மேடு.

திரம் - திறம் – திறன் - திறல். திறம் - திறமை.

ரகர றகரம் இரண்டுள், முன்னது முந்தியும் பின்னது பிந்தியும் தோன்றிற்றென்றும், றகரம் பிந்தித் தோன்றியதினாலேயே நெடுங்கணக்கின் இறுதியடுத்து வைக்கப்பெற்ற தென்றும், அறிதல்வேண்டும். மாந்தர் வாயில் மெல்லொலி முந்தியும் வல்லொலி பிந்தியும் எழுதலே இயற்கையாம். ரகரம் உரத்து றகரம் ஆயிற்றென்க.

ஒ.நோ: ஒளி-ஒளிர்-ஒளிறு, கரு-கறு.

திறம்

திண்ணம், உறுதி, வலிமை, வலிய தன்மை, தன்மை, தன்மைபோன்ற கூறுபாடு, நூற்பகுதி.

ஒரு பொருளின் வலிமை அதன் தன்மையா யிருப்பதாலும், அதன் வொரு தன்மையும் அதன் கூறா யிருப்பதாலும், வலிமையைக் குறிக்கும் சொல், தன்மையையுங் கூறுபாட்டையுங் குறித்ததென்க.

இயல் என்னும் சொல் தன்மையையும் நூற்பகுதியையுங் குறித்தல் போன்றே, திறம் என்னும் சொல்லும் தன்மையையும் நூற்பகுதியையுங் குறிக்கும்.

திர்-திரு-ஸ்ரீ (Sri) = திரண்ட அல்லது திரட்டப்பட்ட செல்வம். ஸ்ரீ-சீ. ஒ.நோ: கோழிக்கோடு - (Calicut) கள்ளிக்கோட்டை. திர-திரை. திரைதல் = திரளுதல், இடையிடை திரளுதல்.

=

திரை = திரண்ட நீரலை, நீரலைபோல இடையிடை தோல் திரங்கிய நிலை, திரட்டப்படும் அல்லது சுருட்டப்படும் மறைப்புத் துணி. அணிந்திருக்கும் ஆடையை மேல்நோக்கித் திரட்டுதலைத்

திரைத்தல் என்று சொல்லும் வழக்கை நோக்குக.

திறம் என்னும் சொல் தன்மையைக் குறித்தல்போல, அதற்கு இனமான 'திரம்', 'திரை' என்னும் சொற்களும் தன்மையைக் குறித்துத் தொழிற்பெயர் விகுதியாகும்.

எ-டு

6T-(h) : LDIT +

திரம் = மாத்திரம், (அளவு). மா

+

+

திரை = மாத்திரை

(அளவு). உரு + திரம் = உருத்திரம்(சினம்).

மாத்தல் = அளத்தல், உருத்தல் = சினத்தல்.

மா என்னும் வினை வழக்கு வீழ்ந்தது. ஆயினும், மா (1/20 வேலி) என்னும் நிலவளவுப் பெயரும், அரைமா ஒருமா இருமா என்னும் எண்ணளவைப் பெயர்களும், மானம்(அளவு, படி, மதிப்பு) என்னும் தொழிற் பெயர் அல்லது தொழிலாகு பெயரும், இன்றும் வழக்கிலுள்ளன.