உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

பகுதிக்கிளவி = தகுதியும் வழக்குமாகிய பகுதிபற்றிய சொற்கள். "பகுதிக் கிளவி வரைநிலை யிலவே." (தொல். சொல். 17)

பகு பக்கு = பிளவு.

“இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.’

பகு

(குறள். 1068)

பக்கம் பகுதி, மாதத்தின் பகுதி(பாதி), அதில் 1/15 பகுதி, இடப்பகுதி, இடம், புறம், திசை, தாளின் ஒரு புறம், நூற்பகுதி, நூல், அருகான இடம், அருகான அல்லது நெருங்கிய இனம், இனத்தார்போற் செய்யும் அன்பு, இருபுறத்துமுள்ள விலா, இருபுறத்துமுள்ள சிறகு, அம்பின் இறகு.

பக்கம் - paksha(வ.).

‘பகுதிக்கிளவி' பக்கச்சொல் எனப்படுதலானும்; பக்கம் என்னும் சொல், பொருள் இடம் காலம் என்னும் மூன்றனுள் ஒன்றன் பகுதியைக் குறித்துச் செய்யுளிலும், புறம் அருகு இடம் என்னும் பொருள்பற்றி உலக வழக்கிலும் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கி வருதலானும்; பக்கம் என்னும் சொற்குரிய பொருளெல்லாம் பகுதி என்னுங் கருத்தையே அடிப்படையாய்க் கொண்டிருத்தலானும்; வடமொழியில் பக்ஷம் என்னும் சொல்லுக்குக் கூறப்படும் பொருளெல்லாம் தென்மொழியில் பக்கம் என்னும் சொல்லுக்கும் ஏற்றலாலும்; பக்கம் என்னும் சொல் பகு என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தமிழ்ச்சொல்லே யெனத் தெளிக.

பக்கம் - L. pagina, F. page, E. page.

பக்கம் - பக்கர் = இனத்தார். பக்கம் = பக்கல்.

பக்கம் பக்கணம்

=

இடப்பகுதி, இடம், ஊர்(சூடா.), ஊர்ப் பகுதி

யான வீதி; வேடர் வீதி(திவா.).

பக்கம்-பாக்கம் = இடப்பகுதி, ஊர்ப்பகுதி, ஊர், நெய்தற் பகுதி யிலுள்ள ஊர், அருகு.

பாக்கத்து விரிச்சி = பக்கத்திற் கேட்கப்படும் நற்சொல்.

பக்கு-பாக்கு = பகுதி, கூறுபாடு, இடம்.

இடப்பெயர்கள் அல்லது இடத்தைக் குறிக்கும் சொற்கள், தொழிற் பெயர் விகுதியாகவும் வினையெச்ச விகுதியாகவும் அமைவது இயல்பு.

எ-கா:

+ தலை = விடுதலை.

விடு

எழு

இல் = எழில்.

தொழிற்பெயர்

விக்கு

+ உள் = விக்குள்.