உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

கடை

உழி

மாணாக்கடை.

உற்றுழி

வினையெச்சப்பால

41

இடப்பொருள் கொண்ட பாக்கு என்னும் சொல், தொழிற்பெயர் விகுதியாகவும் வினையெச்ச விகுதியாகவும் வரும்.

எ-கா: கரப்பாக்கு = கரத்தல். வேபாக்கு = வேதல்.

66

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

""

எழுதேம் கரப்பாக் கறிந்து.

"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

99

அஞ்சுதும் வேபாக் கறிந்து.

(குறள். 1127)

(குறள். 1128)

உண்பாக்கு வந்தேன் = உண்ண(உண்ணும் பகுதியாய்) வந்தேன். பாக்கு + இயம் - பாக்கியம்-bhagya(வ.) = பகுதி, நல்ல பகுதி, பேறு, செல்வம்.

சிலப்பதிகார அடைக்கலக்காதையில் வரும் “பால்வாய்க் குழவி" என்னும் தொடருக்கு "மேற்பெறக் கடவ நல்ல பகுதியைத் தன்னிடத்தே யுடைய குழவி” என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்திருத்தலைக்

காண்க.

66

'அலரெழ வாருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்

என்றார் திருவள்ளுவர்.

""

(குறள். 1141)

வடசொல்லாகிய bhagya என்பதையும், bhaga (பாகம்) என்னும் சொல்லின் திரிவாகக்கொண்டு, நற்பகுதியாகிய பேறு என்றே பொருட் காரணங் காட்டுவர் வடமொழி யாங்கில வகராதி யாசிரியர் மானியர் வில்லியம்சு பேராசிரியர்.

பாக்கியம் என்னும் சொல், மேனோக்கில் ஆரியம் போலத் தோன்றி னும், ஆராய்ந்து பார்க்கின், அது தென்சொல்லே யென்பது தெளிவாகும். வடமொழி தேவமொழி யென்றும், எடுப்பிசையாய் ஒலிக்கும் வடசொல் எல்லாம் ஆரியச் சொல்லே யென்றும், தவறான கருத்துகள் 18 நூற்றாண் டாகத் தமிழர் மனத்தில் வேரூன்றி விட்டதனால், வழக்கற்றும் வேர்ப் பொருள் மறைந்தும்போன பழந்தமிழ்ச் சொற்கள் அயற்சொற் போலத் தோன்றுகின்றன என்க.

பகு - பகம் = பகுப்பு, பகிர்வு

பகம் பகவன்

=

பொருள்களைப் பகிர்ந்தளித்துக் காப்பவன், வள்ளல், தலைவன், கடவுள், கடவுள் தன்மையுள்ள முனிவன்.

பகவன்-பகவான்.

ஒ.நோ: Skt. Bhaga, apportioner of food, a liberal master, gracious lord.