உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

43

பங்கு + அறை = பங்கறை. பங்கறை = பகுதி பகுதியாய் அறுக்கப்பட் டிருத்தல், அழகின்மை.

ஒழுங்கில்லாமற் கொத்தியிருப்பதைப் பங்கறைக் கொத்து என்பது உலக வழக்கு.

பாக்கு பாங்கு. ஒ.நோ: போக்கு-போங்கு.

பாங்கு = பக்கம், பகுப்பு, ஒழுங்கு, அமைப்பொழுங்கைப் ‘பாங்கு பரிசனை' என்பது வழக்கு.

பாங்கு பாங்கர் = பக்கம்.

பாங்கு - பாங்கன் = பக்கமாயிருந்து பேணும் துணைவன். ஒ.நோ: It. paggis, F. page, E. page.

பகு - பா. பாத்தல் = பகுத்தல். பா பகுப்பு, பங்கு.

"மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே”

பாத்தி = பகுப்பு, புன்செய்ப்

பா - பாது = பகிர்வு. பாதிடுதல் = பகிர்தல்.

66

தந்துநிறை பாதீடு உண்டாட் டுக்கொடை.

""

(தொல். எழுத்து. 172)

(தொல். பொருள். 1004)

பாது + கா - பாதுகா. பாதுகாத்தல் = உணவுப்பொருள்களைப் பகிர்ந்தளித்துக் காத்தல்.

வகு என்னும் அடியின்கீழ்க் காட்டப்பட்ட சொற்களெல்லாம், கொட்பாட்டன் - பாட்டன் - மகன் - பேரன் - கொட்பேரன் என்ற தொடர்பு போலத் தொடர்புபட்டிருப்பதையும், வகு என்பதன் திரிபான பகு என்னும் அடியே வடமொழியில் வழங்குவதையும் அதுவும் bhaj என்ற திரிவடிவிற் காட்டப்படுவதையும், பகு என்பதன் அடிப்பிறந்த வடமொழிச் சொற்கள் தென்மொழிச் சொற்கள் போலப் பல்கியும் தொடர்புபட்டும் இராமையையும், பகு என்னும் ஒரே யடியினின்று திரிந்துள்ள பக்கம், பாகு, பாகம் என்னும் சொற்கள், வடமொழியில் முறையே paksha, bahu, bhaga என வெவ்வேறு முதலெழுத்துடன் வழங்குவதையும், செவ்வன் ஆய்ந்து காண்க.

3. வீழ். வீழ்தல்

ஒருவர்மேற் காதல்கொண்டு விழுதல், அங்ஙன் விழுமாறு காதலித்தல், காதலித்தல், விரும்புதல். 'To fall in love with' என்னும் ஆங்கில வழக்கை நோக்குக.

"தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு

என்றார் திருவள்ளுவர்.

99

(குறள். 1103)

வீழ்-விழு. விழுதல் = விரும்புதல். விழுத்தல் = பிறர் விரும்பும்படி சிறத்தல்.

ஒருவர்க்கு வேண்டியவரைச் சிறந்தார் என்று சொல்வதையும், விரும்பப்படுகின்றவர் சிறப்பாகக் கொண்டாடப்படுவதையும், நம்பு நய