உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

என்னும் பகுதிகளிலிருந்து தலைமை குறிக்கும் நம்பன், நாயகன் என்னும் பெயர்கள் தோன்றியிருத்தலையும் நோக்குக.

‘வடுக வரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர்' என்பது பழைய வழக்கு. விழுக்கழஞ்சு, விழுப்புண், விழுப்பேறு முதலிய தொடர்களில், விழுச்சொல் சிறப்புக் குறித்தல் காண்க.

விழு

விழுமு. விழுமுதல் = சிறத்தல். விழுமிய = சிறந்த.

ஒ.நோ: குழு

குழுமு குழுமிய.

விழுமு விழுமம் = சிறப்பு.

விழு

=

+ அரையன்

சிறப்பு. விழுப்பு விழுப்பு-விழுப்பம்

விழுப்பரையன்.

||

விழு விழா விழவு = விரும்பிச்செய்யும் கொண்டாட்டம். விழா- வ்ரா (வ).

அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடாகிய தமிழ் வரலாறு என்னும் போலியாராய்ச்சி நூலில், வ்ரா என்னும் வடசொல்லினின்று விழா என்னும் தென்சொல் பிறந்துள்ளதாகக் கூறியுள்ள கூற்றின் புன்மையையும் புரைமையையும் நோக்கித் தெளிக.

விழு - விழை. Gk. philos, desire.

Philanthropy, Philology முதலிய ஆங்கிலச் சொற்களின் முதனிலை விழைவுச் சொல்லே.

விழை விழைச்சி = இன்பநுகர்ச்சி, புணர்ச்சி.

விழை - விழைச்சு = புணர்ச்சி.

=

விழை - விழாய்-விடாய் நீர்வேட்கை, விருப்பம்.

விழு

விள் - விரு விரு விருந்து = விரும்பியிடும் சிறந்த வூண், அவ் வூணுக்குரிய புத்தாள், புதுமை.

விரு

விரும் விரும்பு.

விள் - வெள் - வெம். வெம்மை = விருப்பம்.

“வெம்மை வேண்டல்”

வெம்மை-வெய்யோன்

தக்கவன்.

=

(தொல். 817)

விரும்புகின்றவன், விரும்பப்படத்

ஒ.நோ: செம்மை - செய்யோன் - சேயோன்.

வெள்-வேள் = விரும்பு (வி.), விரும்பத்தக்க தலைவன், தலைவன், சிற்றரசன், காதலை யுண்டுபண்ணும் தலைவனாகிய முருகன்.

காமன், குறிஞ்சித்

வேள் + ஆளன் வேளாளன் = பிறரை விரும்பி விருந்தோம்பும் உழவன்.