உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

47

சொல்லின் இயற்பொருள் நிறம் என்பதே. ஆதலால், நிற வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டதே வரணப் பகுப்பாகும். ஆரியர் வெண் ணிறத்தர்; மங்கோலியர் பொன்னிறத்தர்; திராவிடர் புகர் நிறத்தர்.

மக்கட் கலப்பாலும் தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் வரணத் தாரின் நிறம் மாறுவதுண்டு.

குடும்பு முதல் வரணம் வரை ஒவ்வொரு தொகுதியும் அளவும் தொடர்பும்பற்றிச் சிறியதும் பெரியதும் என இருதிறப்படும்.

மக்கள் போன்றே சொற்களும் குடும்பு முதல் வரணம் வரை பலவகைத் தொகுதிகளாகப் பகுத்தற் கேற்றன.

தமிழிலுள்ள சொற்களெல்லாம், தமிழரைப்போல் குடும்பு முதல் பால் வரை ஐவகைத் தொகுதிகளாகப் பகுக்கப் பெறும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிக ளெல்லாம் இனமொழிகளாதலின், அவற்றிலுள்ள பொதுச்சொற்களெல்லாம் இனச் சொற்களாகும்.

திராவிடச் சொல்லோடு தொடர்புள்ள ஆரியச் சொற்களும், சித்தியச் சொற்களும், அவை போன்ற பிறவும், வரணம் என்னும் தொகுதிப்பட்டன. ஆதிதிராவிட மக்கள் தட்பவெப்பநிலை வேறுபாட்டால் எங்ஙனம் ஆரிய ரானாரோ, அங்ஙனமே அவர் சொற்களும் ஆரியமாய் மாறிவிட்டன என்க.

இக் கட்டுரையின் தொடக்கத்தில் காட்டப்பெற்ற சொற்குலத்தில், முதலிலிருந்து கன்று-அன்று என்பது வரையும் ஒரு சொற்குடும்பமாகும். அதனொடு கள்-களம் என்பது வரையுள்ள பகுதியைச் சேர்த்துக்கொள்ளின் ரு சொற்குடும்பமாகும். அதனொடு கறு-காறு என்பதுவரை சேர்த்துக் கொள்ளின் ஒரு சொற்குடியாகும்; அதனொடு இறுதிவரை சேர்த்துக் கொள்ளின் ஒரு சொற்குலமாகும்.

கல் என்னும் வேர், குல் என்னும் வேரின் திரிபாகும். சொல்லாக்கத் திரிவில் சிறுபான்மை உகரம் அகரமாகத் திரிதல் உண்டு.

எ-கா: முடங்கு-மடங்கு குரும்-கரம் (இந்தி)

குடும்பு -கடும்பு குடம்-கடம் (வடமொழி)

Butt (முட்டு), cuckoo(குக்கூ) முதலிய ஆங்கிலச் சொற்களில் உகரம் அகரமாக ஒலிப்பது இக் காரணம் பற்றியே.

குல் என்னும் வேர்ச்சொற் பொருள் பொருந்தல் அல்லது கலத்தல். குலவு = பொருந்து, கூடு. குலவு -குலாவு.

குல் - குலவு

குல் - குலம் குலம் = கூட்டம், வகுப்பு.

குல் - குலை = குலை = கூட்டம், கொத்து.

குள் - குழு

குழு

குழு = கூட்டம், திரட்சி. குழு - குழூஉ. குழாம், குழு-குழை = திரண்ட காதணி.