உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

குழு குழுமு - குழுமம், ஒ.நோ: L. glomus, E. glomerate, globe,

etc.

குழு குழவி = உருண்ட அறைகல்.

=

குள் - குண்டு திரண்டது, உருண்டையானது.

பல பொருள்கள் அல்லது பகுதிகள் ஒன்று சேரும்போது திரட்சியும் அதனால் உருட்சியும் உண்டாகும். ஒன்றோடொன்று ஒட்டாப் பொருளாயின் திரட்சிமட்டும் உண்டாகுமென்றும், ஒட்டும் பொருளாயின் திரட்சியோடு உருட்சியும் உண்டாகுமென்றும் பகுத்தறிதல் வேண்டும். மக்கட்டிரளையும் மட்டிரளையும் நினைத்துக் காண்க.

=

குண்டு குண்டை = உருண்டு திரண்ட எருது.

குண்டு குண்டன்

வருத்துபவன்.

=

திரண்டவன், உடல் வலிமையால் பிறரை

குண்டு - குண்டான் குண்டான் = திரண்ட தடி.

குண்டு குண்டா = திரண்ட வடிவான கலம்.

குண்டு

குல்

=

குண்டலம் திரண்ட காதணி.

கல் கல = பொருந்து, கூடு.

கல் - கல்வி, கலவை, கலப்பு.

கல கலம்பு - கலம்பம் - கதம்பம்.

கலம்பு கலம்பகம்.

கல கலகம் = பலர் கலந்து செய்யும் சண்டை. ‘கைகலத்தல்' என்னும் வழக்கை நோக்குக.

கல கலாம், ஒ.நோ: பொரு-போர்.

பொருதல் = பொருந்துதல், கலத்தல்.

கல கலங்கு - கலக்கு - கலக்கம்.

கலங்கல் = பல பொருள்கள் கூடுதல், அதனால் உண்டாகும் மயக்கம். மண் தூசி முதலிய பிற பொருள்களுடன் கலந்த நீர் கலங்கல் நீராகும். பல பொருள்கள் கலந்திருக்கும்போது, அவற்றுள் வேண்டியதைப் பிரித்தறிய முடியாத கலக்கம் ஏற்படுதலின், கலத்தற் கருத்தினின்று கலக்கக் கருத்துத் தோன்றிற்று. அதுவோ, இதுவோ, அன்றி வேறெதுவோ Π என்றிப்படி ஒன்றைத் துணியமுடியாதவாறு பல கருத்துகள் மனத்திற் கலத்தல் மனக்கலக்கம் என்றறிக. கவர்வழிகளைக் காணும்போது வழிப் போக்கனுக்கும், ஒருநிலைப்பட்டவர் பலர் கூடியிருக்கும்போது அவருள் ஒருவரைக் காண விரும்பும் புதியோனுக்கும் மனக்கலக்கம் ஏற்படுதல் காண்க. நளன் வடிவில் நால்வரைக் கண்ட தமயந்தி கலக்கத்தையும் நினைத்துக் காண்க. கலக்கம் என்பதன் ஒருபொருட் சொற்களான 'மயக்கம்', 'மருள்' என்னும் சொற்களும் இதே மொழிப்பொருட் காரணத்தைக் கொண்டவையே.

மயங்கு

- மயக்கம். மயங்குதல் = கலத்தல், கலங்குதல்.