உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

49

திணைகளும், வேற்றுமைகளும் தம்முள் ஒன்றோடொன்று கலத்தல் திணைமயக்கம் என்றும் வேற்றுமை மயக்கம் என்றும் கூறப்படும். பகலும் இரவும் கலக்கும் மாலையை 'மயங்குபொழுது' என்பர். இது நூல்வழக்கில் 'மருண்மாலை' எனப்படும்.

இனி, ஒளியின்மையாலோ, காதலர்ப் பிரிந்தமையாலோ மக்கள் மனங்கலங்கும் மாலை மருண்மாலை எனினுமாம்.

மருட்சி = மயக்கம். மரு - மருள். மருவுதல் = பொருந்துதல், கலத்தல். மரு - மருமம் - மருமம் - மருமர் மம்மர் = மயக்கம்.

Confusion என்னும் ஆங்கிலச் சொல்லும் கலத்தல் என்னுங் கருத்தடியாகவே மயக்கப் பொருளைக் கொண்டதாகும். (con = together, fuse = mix)

கல - கலுழ் கலுழி. கலுழ்தல் = கலத்தல், கலங்குதல். கலுழி = கலங்கல் நீர், மையொடு கலந்த அல்லது மனங்கலங்கி யழும் கண்ணீர். கலக்கக் கருத்தினின்று இருட்கருத்தும், இருட்கருத்தினின்று கருமைக் கருத்தும் தோன்றும். அறிவு அகவொளி யாதலின், அறியாமை அல்லது மயக்கம் அகவிருள் எனப்படும். ஒன்றன் உண்மை யறியாது கலங்கும் கலக்கம் பொருள் தெரியாத இருள்போன்ற நிலையே. 'To be left in the dark' என்பர் ஆங்கிலரும். இருள் கருநிறம் ஆகையால், கலக்கப் பொருட்சொல் கருமைப் பொருளைத் தழுவிற்று.

கல் கால் = க கருப்பு. கல் - கன்று = வெயிலாற் கருகு

ஒரு சொற்கு ஒரு பொருண்மை, உத்திக்குப் பொருந்துவதோடு ஒப்புமையால் உறுதிப்பட வேண்டும். கலத்தற்பொருள் தரும் கல் என்னும் சொல் கருமைப்பொருள் குறித்தல் போன்றே, அதன் ஒருபொருட் சொல்லான மய என்னும் சொல்லும் கருமைப் பொருள் குறிக்கும். மயங்கு என்னும் சொல்லின் வேர் ‘மய' என்பதே. கலங்கு என்னும் சொல்லின் வேர் 'கல' என்றிருத்தல் காண்க.

மய மயங்கு - மசங்கு.

மய = மயல்

மால். மயல்

மையல் = காதல் மயக்கம்.

மால் = மயக்கம், கருமை, கரிய மேகம், கரிய விண்டு (விஷ்ணு). மால் - மழை. மால் - மாரி = கரியாள், காளி, மழை.

=

மால் - மாலம் = மயக்கம், ஏமாற்றம்.

மால்

மாலை = மயக்கம், பலபொருள் கலந்த வரிசை, மயங்கும் வேளை. மாலை-மாலா (வ.).

மால்

மா

=

மை. மாமை = கருமை. மாயோன் கரியன், விண்டு. ஒ.நோ: E. malbino = கரியன்.

மை =

கருப்பு, மேகம், வெள்ளாடு(காராடு), கரிய பசை அல்லது குழம்பு, பசைப்பொருள்.

மை

மசி

=

மசகு வண்டி மை.