உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13

நெடுங்கணக்கு (அரிவரி)

சென்ற ஜூன் மாதம் (1934) 10ஆம் 11ஆம் நாள்களில், நெல்லையில் நடந்த, சென்னை மாகாணத் தமிழன்பர் மாநாட்டில், பதின்மூவர்போல், தமிழ் நெடுங்கணக்குக் குறைவுள்ள தென்றும், அதிற் சில எழுத்துகளைப் புதிதாய்ச் சேர்க்கவேண்டு மென்றும், பேசினதாக அம் மாநாட்டறிக்கையிற் கண்டாம்.

ஒரு மொழியிலுள்ள அரிவரி நிறைவுள்ள தில்லதென் றறிதற்கு, அம் மொழியிலுள்ள ஒலிகளையெல்லாம் குறித்தற்கு வரிகளுண்டா என்று காண்டல் வேண்டும். தமிழில் அதன் ஒலிகளையெல்லாம் குறித்தற்குப் போதிய வரிகளுண்டென்றே சொல்ல வேண்டும்

மெய்யெழுத்துகளிற் சிலவற்றிற்கு ஈரொலியும் சிலவற்றிற்கு

மூவொலியு மேலுமுள.

எ-டு :

க-1. க், க்கா k. (வலிய ககரம்.)

2. உலகு, அகம் என்னும் சொற்களில் மெல்லிய ககரம், ' ககரத்திற்கும் ஆய்தத்திற்கும் இடைத்தர ஒலி.

3. தங்கம், என்னும் சொல்லில் g போன்ற தொனிப்பொலி (voiced letter).

ஙகரத்தை யடுத்த ககரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும்.

ச - 1. ச், ச்ச ch வலிய சகரம்.

2. சட்டி, சட்டை என்னும் சொற்களில் s போன்ற மெல்லிய ஒலி. 3. பசி, கசி என்னும் சொற்களில் S அல்லது ஸ போன்ற மெல்லிய ஒலி.

4. பஞ்சம் என்னும் சொல்லில் j போன்ற தொனிப்பொலி. ஞகரத்தை யடுத்த சகரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும்.

ஞ-1. ஞ், ஏறத்தாழ ய்ங் போன்ற ஒலி.

2. மஞ்சள் என்னும் சொல்லில் nj போன்ற ஒலி.

ட-1. ட், ட்ட, t போன்ற வல்லொலி.

2. ட, d போன்ற தொனிப்பொலி.