உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நெடுங்கணக்கு (அரிவரி)

93

டகரம் உயிர்மெய்யாய்த் தனித்து வரும்போதெல்லாம் தொனித்தே ஒலிக்கும்.

த- 1. த், த்த, t போன்ற வல்லொலி.

தட்டை, தண்ணீர் முதலிய சொற்களிலுள்ள தகரமும் வலித்தே ஒலிக்கும்.

2. விந்தை, மதி முதலிய சொற்களில் d போன்ற தொனிப்பொலி. நகர மெய்யை அடுத்துவரும் தகரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும்.

ப - 1. ப, ப், ப் ப , p வல்லொலி.

2. கம்பம், பண்பு, அன்பு, மரபு முதலிய சொற்களில் b போன்ற தொனிப்பொலி.

ம், ண், ன் என்ற மெய்களை யடுத்துவரும் பகரம் தொனித்தே யொலிக்கும்.

ற-1.

2.

3.

)

ற, ற், வலிய றகரம் (Hard or trilled r)

ற்ற, t போன்ற வல்லொலி.

கன்று என்னும் சொல்லில் (candle என்னும் சொல்லிலுள்ள d போன்ற மெல்லிய டகரம்.

னகரமெய்யை அடுத்துவரும்போதெல்லாம் றகரம் இங்ஙனமே ஒலிக்கும்.

றகரம் இரட்டிக்கும்போது இரண்டு மிசைந்து t போல ஒரே யொலியா யொலிக்கும்; னகர மெய்யை அடுத்துவரும்போது இரண்டு மிசைந்து, nd போல ஒலிக்கும். இதையறியாத ஆங்கிலரும், ஆங்கிலவழித் தமிழறிஞரும், வெற்றி என்பதை வென்றி என்றும் வென்றி என்பதை வென்றிறி என்றும் பிழைபட உச்சரிப்பர்.

எழுத்துகள் இடமும் சார்பும்பற்றிப் பற்பல விதமாக ஒலிப்பதைக்

குறித்தே,

எடுத்தல் படுத்தல் நலித லுழப்பின்

திரிபும் தத்தமிற் சிறிதுள வாகும்"

(நன். )

என்றார் பவணந்தியார். இங்ஙனம் ஓரெழுத்தே பற்பல விதமாக ஒலிக்கினும், எவ்வி டத்தில் எவ்வொலியென் றறிய ஏதும் இடர்ப்பாடில்லை. ஏனென்றால் ஒவ்வோ ரொலியும் இயல்பாகவே இடமும் சார்பும்பற்றி வெவ்வே றொலியாய் ஒலிக்கின்றது. தமிழருள் எவர் பேசினும் இவ் வியல்பு மாறு வதின்று. பேசும்போது மட்டுமன்றி ஒரு நூலை வாசிக்கும்போதும் இவ் வியல்பு மாறுவதின்று. இதைக் கால்டுவெல் கண்காணியாரும் தமது ஒப்பியல் நூலிற் குறித்துள்ளார்.