உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

இலக்கணக் கட்டுரைகள் இயல்பாகவும் எளிதாகவும் இருக்கிற தமிழ்மொழியைப் போன்றே, அதன் எழுத்துமுறையும் இயல்பாகவும் எளிதாகவு மிருக்கவேண்டி நம் நுண்மாண் நுழைபுல முன்னை யாசிரியர் ஒரு வரியானேயே பல ஒலிகளைக் குறிப்பித்தனர். என்னே! அவர் அறிவின் மாண்பு!

இனி, தமிழிலுள்ள இசையும் குறிப்பும்பற்றிய பல்வகை யொலிகளை யுங் குறிக்க வரியில்லை யென்னலாம்.

எ-டு : கும் கும் (gum gum) மிருதங்கத் தொனி.

உஸ் - நாயை உஸ் காட்டல் அல்லது வேட்டைமேல் ஏவல். ஜல்ஜல் சலங்கை யொலி.

ஜம் - கம்பீரத் தோற்றக் குறிப்பு.

இஸ்ஸ்ஸ் (ezzz) - பாம்பு, வண்டு பாம்பு, வண்டு முதலியவற்றின் இரைச்சல்.

ண்

உஷ் (ush - hush) அமைத்தற் குறிப்பு. இவையெல்லாம் எழுத்து முறைக் கேலாத புறவொலிகளாகக் கொண்டனரேயன்றி, பொருண் மொழிக்கு வேண்டும் எழுத்தொலிகளாகக் கொண்டில ரென்க.

அற்றேல் பிற மொழிகளில் இவ் வொலிகளைக் கொண்டதென்னை யெனின், அவையெல்லாம் செயற்கை மொழிகளாதலின் அவற்றுக்குக் கொள்ளப்பட்டன வென்றும், அவற்றுள்ளும் முற்கு, வீளை, கனைப்பு, கத்து, அழுகை, தும்மல் முதலிய ஒலிகளையெல்லாம் குறிக்க வரியில்லை யென்றும், எல்லா ஒலிகளையும் குறிக்க வரியுள்ள மொழி உலகத்தில் ஒன்றுமேயில்லை யென்றும் கூறி விடுக்க.

எ, ஒ, ழ, ற என்ற ஒலிகள் வடமொழிக்கில்லை. ஆகையால் ஒட்டெலும்பு என்பதை ஓட்டேலும்பு என்றும், வாழைப்பழ வற்றல் என்பதை வாலபல வர்ரல் என்று மல்லவோ எழுத வேண்டும்?

ஞ, ண, ழ, ள என்ற ஒலிகள் ஆங்கிலத்திற் கில்லை. இவ் வொலிகள் வருகின்ற சொற்களை எங்ஙன் ஆங்கிலத்தில் எழுத முடியும்? கண்ணியைக் கன்னியென்றும் மூளையை மூலையென்று மல்லவோ எழுத வேண்டும்?

ரு

இங்கிலீஷில் உள்ள f, z, zh முதலிய ஒலிகள் எத்துணையோ ஒலிகளையுடைய வடமொழிக்கும் இல்லையே! இங்ஙனம் ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பெழுத்துக ளிருப்பதால், ஒருமொழிச் சிறப்பெழுத்துச் சொற்களைப் பிறமொழியி லெழுத வொண்ணாதாகும். இதை யறியாத வடமொழிவாணன் ஒருவன், ஒரு தமிழனை நோக்கிச் சகஸ்திரதளாம்புஜம் என்பதைத் தமிழில் எழுதுக என்று பழித்தானாம், பின்பு வாழைப்பழவற்றல் என்பதை வடமொழியில் எழுதுக என்று தமிழன் சொன்னதும் விழித்தா னாம். ஆகையால் ஒரு மொழிச் சிறப்பெழுத்துச் சொற்களை இன்னொரு மொழியில் விகாரமின்றி யெழுத வொண்ணா தென்றும், எல்லா மொழிச் சொற்களையும் தற்சமமாக எழுதும் மொழி உலகத்தே ஒன்று மில்லை யென்றும் தெரிந்துகொள்க.