உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

இலக்கணக் கட்டுரைகள்

தமிழில் வரிகள் எளிதாய் விளங்குமாறு வெவ்வேறு வடிவாயுள்ளன. ஒள என்பதிலுள்ள ள வடிவைச் சிறிதாயெழுதாதது அச்சுவார்ப்பார் குற்றமே யன்றி எழுத்தாசிரியர் குற்றமன்று. தெலுங்கு, அரபி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் மாணவர் மயங்குமாறு பல வரிகள் ஏறத்தாழ ஒரேவடிவா யுள்ளன.

தமிழ்வரிகள் இங்கிலீஷ் வரிகள்போல மிக நுண்ணிய (Diamond, Brilliant) வடிவிலு மெழுதப்படும். சமற்கிருதம், அரபி, தெலுங்கு முதலிய வற்றின் வரிகள் அத்துணை நுணுக்கியெழுத இடந்தரா. இதனாலேயே சமற்கிருத வெழுத்துகளைக் கூட்டெழுத்துக் (சம்யுக்தாக்ஷரம்)களாக எழுதுவர்.

இனி, உயிரொலியும் மெய்யொலியும் உயிரும் மெய்யும்(life and body) கூடிய உயிர்மெய்(பிராணி) போல ஒன்றி ஒலிப்பது உயிர்மெய் வரிகளாற் குறிக்கப்பட்டது. உயிர், மெய், உயிர்மெய் முதலிய குறியீடுகள் தமிழரின் தத்துவவறிவை யுணர்த்தும். உயிர்மெய் வரிகளால் ஒலி நூலறிவும் வரிச்சுருக்கமும் பயனாம்.

தமிழ் அரிவரியில் உயிர் முன்னும் மெய் பின்னும் ஆய்தம் இடையும், உயிருள் குறில் முன்னும் நெடில் பின்னும், மெய்யுள் வலி முன்னும் மெலி பின்னும் இடை இடையும் வைக்கப்பட்டன.

உயிர்மெய் வரியும் எழுத்து முறையும் தமிழுக்கே சிறப்பாகும். இந்திய மொழிகட்கெல்லாம் இவை பிற்காலத்தே தமிழைப் பின்பற்றி யேற்பட்டன. அரபி, ஹீப்ரு முதலிய சேமியக் (Semitic) கவைமொழிகள் எல்லாவற்றிற்கும், சமற்கிருத மொழிந்த ஆரியக் கவைமொழிகள் எல்லா வற்றிற்கும் இவையில்லை. எழுத்துகள் இங்கிலீஷிற் போல உயிரும் மெய்யும் வேறு வேறு அடுத்தடுத் தெழுதப்படுவதுடன், அரிவரியில் உயிரும் மெய்யும் முறையின்றி மயங்கிக் கிடக்கும். ஆரியமும் சேமியமு மாகிய மேலை மொழிகட்கெல்லாம் உயிர்மெய் வடிவும், எழுத்து முறையும் இல்லாதிருக்கவும், சமற்கிருதத்திற்கு மட்டும் அவை எங்ஙன மிருந்திருத் தல் கூடும்? சமற்கிருதத்திற்கு அவை இருந்தனவெனின், அதன் இனமாகிய செருமன், டச்சு, கிரேக்கு, இலத்தீன் முதலிய மொழிகட்கும், அவற்றை அடுத்து வழங்கும் சேமிய மொழிகட்கும் ஏன் அவையில்லை? வடமொழி ஆரியர் இந்தியாவிற்கு வந்தது கி.மு. 3000. அவர் வருகைக்கு முன்னரே தமிழில் எழுத்திருந்தது . அவ் வெழுத்துகள் உயிர்மெய் நீங்கலாக 31.

ஒலிமுறையினும் சொன்முறையினும் தமிழுக்கு அடுத்துள்ள கிரேக்க, இலத்தீன் மொழிகளில் முறையே எழுத்துகள் 24, 25; வடமொழியில் 48. இலத்தீன் எழுத்துகள் 24 என்றும், 23 என்றும் கணக்கிடுவதுமுண்டு. தமிழிலில்லாத சில செயற்கை யொலிகள் இலத்தீன், கிரேக்கு மொழிகளி லுள. ஆனால், அவற்றிற் பலவற்றிற்குத் தனி வரிகள் இல்லை. B,G, முதலிய