உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நெடுங்கணக்கு (அரிவரி)

97

தொனிப்பொலிகட்குத் தனி வரியுள. bh, gh முதலிய மூச்சொலி சேர்ந்த தொனிப்பொலிகட்குத் தனிவரி யில்லை. சமற்கிருதத்தில் அவற்றிற் கெல்லாம் தனிவரி யுண்டு. அதோடு ஞ, ண முதலிய தமிழ் எழுத்துகளும் சேர்க்கப்பட்டுள. மேலை மொழிகட்கும் தமிழுக்குமுள்ள எழுத்துகளிற் பெரும்பாலனவற்றிற்குத் தனிவரி யமைத்து வடமொழி யெழுத்துகளைப் பெருக்கிக் காட்டினர் வடமொழிவாணர். க, ச, ட, த, ப என்று தமிழ்முறையில் வல்லின மெய்யெழுத்துகளிருப்பதும், k, kh, g, gh என ஒவ்வொரு வல்லின மெய்யும் தொனிப்பதும், தொனியாததும், மூச்சொலி சேர்ந்ததும் சேராததுமாக நந்நான்காக உறழப்பட்டிருப்பதும், சமற்கிருதத்தின் செயற்கையான எழுத்துப் பெருக்கைக் காட்டும்.

சமற்கிருதம், கிரேக்க இலத்தீன் மொழிகளின் திரிபு அல்லது வளர்ச்சி யென்பதற்குப் பல ஆதாரங்களுள. கிரேக்க இலத்தீன் மொழிகள் ஆரிய மொழிகளில் மிகப் பழைமையானவை. கிரேக்க இலத்தீன் எழுத்துகளினும் சமற்கிருத எழுத்துகள் மிகுதி. கிரேக்க இலத்தீனிலுள்ள பல சொற்கள் சமற்கிருதத்தில் மிகத் திரிந்துள்ளன. சமற்கிருதம் என்னும் பெயருக்கே நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். உலகத்திலுள்ள மொழிகள் எல்லாவற்றினும் எழுத்துப் பெருக்கமும் செயற்கையொலிப் பெருக்க முள்ளது சமற்கிருதமொன்றே. அதனானேயே அது வழக்கற் றொழிந்தது.

வடமொழி யெழுத்துகளை 48 ஆகப் பெருக்கி யிருப்பினும், ஒலி முறைப்படி பார்ப்பின், அவற்றிற் புணரொலிகள் அல்லது கூட்டெழுத்துகள் பலவாகும்.

'ரு', 'லு' என்பவை குற்றியலுகரம் சேர்ந்த ரகர லகரங்களாகும். 'ரூ என்பது ரு என்பதன் நீட்டம். ‘அம்' என்பது அம் என்னும் அசை; அகர உயிரும் மகரமெய்யும் சேர்ந்தது. இவை உயிர்மெய்களும் அசையுமாக விருந்தும் உயிரெழுத்துகளிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எ, ஒ என்ற உயிர்கள் வடமொழிக்கில்லாதது ஒரு பெருங் குறையாகும்.

"

மெய்யெழுத்துகளில் ஐ வருக்கத்தில் h சேர்ந்த எழுத்துகளெல்லாம் இரட்டை யெழுத்துகளாகும். சந்தியக்ஷரங்கள் சில தனி யெழுத்துகள்போற் காட்டப்படும். இதனால் வடமொழி யெழுத்துப் பெருக்கினால் ஒரு சிறப்பு மில்லை யென்க.

வடமொழி ஆரியர் இந்தியாவிற்கு வந்த பின்னரே உயிர்மெய் வரியும் எழுத்துமுறையும் வடமொழிக்கு ஏற்பட்டன. வடமொழி வரிகள் தென்மொழி வரிகளின் திரிபே என்பது இருமொழி வரிகளையும் ஒப்பு நோக்குவார்க்கு இனிது புலனாம். வடமொழி யரிவரி யேற்பட்ட பின் அதை யொட்டி அதன் கிளைமொழிகட்கும் பின்பு தமிழ்க் கிளைமொழிகட்கும் அரிவரிகள் ஏற்பட்டன. இதனால் பெர்சியன் அரபி வரிகளைக் கொண்ட இந்துஸ்தானி யொழிந்த ஏனை யிந்திய மொழிகட்கெல்லாம் உயிர்மெய் வரியும் எழுத்துமுறையும் ஏற்பட்டுள.

7