உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'காரம், காரன், காரி'

51

கடி என்னும் சொல்லும் பின்னர்க் கரி என்று திரியும். டகரம் ரகரமாதல் பன்மொழிக்குப் பொதுவான போலித்திரிபாம்.

தமிழ் படவன்

அடுப்பங்கடை

தமிழ் பரவன்

அடுப்பங்கரை

தமிழ்

குடகு

கவடி

ஆங்கிலம் coorg

coory

கடு என்னும் சொற்குப் போன்றே அதன் திரிவுகளான கடி கரி என்பவற்றிற்கும், மிகுதல் என்பதே அடிப்பொருளாம். உப்புக்கரித்தல் என்னும் உலக வழக்கில், கரித்தல் என்பது மிகுதற் பொருள் தருதல் காண்க. கரித்தல் என்பது, தன்னளவில் மிகுதற்பொளுணர்த்துமேயன்றி, சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் குறித்துள்ளதுபோன்று உப்புக் கரித்தல் என்று பொருள்பட்டுவிடாது. அவ் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள முதற்பொருள்

வருமாறு:

“To be saltish to the taste; உப்புச்சுவை மிகுதல்.

இந்தக் கறி உப்புக்கரிக்கிறது.

இதில் விளக்க எடுத்துக்காட்டு, 'இந்தக் கறி கரிக்கிறது' என்றிராமல், 'இந்தக் கறி உப்புக்கரிக்கிறது' என்றிருப்பதே, கரித்தல் என்பதற்கு மிகுதற்பொருளே உண்மையைக் காட்டுதல் காண்க.

கரி என்னும் வினைப்பகுதி, முதனிலை திரிந்து விகுதியேற்கும் முறையில் காரம் என்று தொழிற்பெயராம்; படி என்பது பாடம் என்றாவது போல். காரம் என்னும் சொற்கு, மிகுதி, வன்மை, கடுமை, உறைப்பு, சினம் முதலியன பொருளாம். அவற்றுள், வன்மைக் கருத்தினின்று, முறையே வலிமை, ஆள்வினைத்திறன் (அதிகாரம்), உரிமை முதலிய பக்கக் கருத்துகள் தோன்றும்.

எந்தப் பொருளும் அளவில் மிகுவதாலேயே வலிமையடையும். "நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின் மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை

வளிமிகின் வலியு மில்லை’

என்று புறங்கூறுதல் காண்க.

(புறம்.51)

அகக்கரண வாற்றலாகிய உளவலி புறக்கரண வாற்றலாகிய உடல்வலி ஆகிய இரண்டனுள், முதலில் தோன்றியது உடல் வலியே. பொதுவாக, உடற்பருமனே உடல்வலிக்குக் காரணமாகும். உடல்வலியால் ஒருவன் ஒரு பொருளைக் கைப்பற்றி யாளலாம். அவ் ஆட்சியே அவனுக்கு அப் பொருள்மேல் அதிகாரத்தைக் காட்டும். அவ் அதிகாரமே உரிமையாம். ஒருவன் தன் வலிமை மிகுதியால் இன்னொருவன் பொருளிற்குக் கூட அதிகாரியாகலாம். 'வலிமைக்கு வழக்கில்லை’ என்பது இன்றும் உண்மையான பழமொழியாகும்.