உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'காரம், காரன், காரி’

53

ப்பக்காரி, எண்ணெய்க்காரன், காரியக்காரன், சண்டைக்காரன், தையற்காரன், பெரியதனக்காரன், மருந்துக்காரன், வேட்டைக்காரன் முதலிய தொழில்பற்றிய பெயர்கள் ஒரு பொருளைச் செய்பவரை யுணர்த்துதற்குப் பொருந்தினும்; ஆட்டுக்காரன், காய்ச்சற்காரன், கோழிக்காரன், சிரங்குக்காரன், தண்ணீர்க்காரன், நிலத்துக்காரன், பாற்காரன், மீசைக்காரன், முட்டைக்காரன், வண்டிக்காரன், வீட்டுக்காரன் முதலிய பல பெயர்கள் அப் பொருட்கு எள்ளளவும் பொருந்தாமை காண்க. மேலும், ஆளின்றியிருக்கும் ஒரு பொருளை ஒருவன் கண்டவுடன், அப் பொருட்பெயரோடு காரன் அல்லது காரியீறேற்றி, அப் பொருட்கு உரியவரைப்பற்றி வினவுவதேயன்றி. அதனைச் செய்பவரைப்பற்றி வினவுவது இயல்பன்று. செய்பவரைப்பற்றி அறிய விரும்பின் செய்பவர் என்னும் வினையாலணையும் பெயரையே யன்றி, காரன் அல்லது காரியீற்றை அப் பொருட்பெயரொடு சேர்த்துக் கூறார். மேலும் காலன் காலி, காதன் காதி, நாகன் நாகி, மருதன் மருதி என்பன போலக் காரன் காரி என்பனவும், தமிழ்ப் பாலீறை ஏற்று நிற்றல் காண்க.

வண்டிக்காரன், வீட்டுக்காரன் முதலிய பெயர்கள், சில விடத்து உண்மையான அல்லது நிலையான உரிமையாளரைக் குறியாவிடினும், வேலைக்காரனும் வாடகைக் குடித்தனக்காரனும் போல்வார் சிறு போதைக் கேனும் ஆட்சியளவில் உரிமையாளர் போன்றிருப்பதால், உரிமைக் கருத்தை விட்டவையாகா.

கரி என்னும் வினைச்சொல், அதி என்னும் முன்னொட்டுப் பெற்று அதிகரி என்றும் நிற்கும். அதி என்னும் முன்னொட்டு வடசொல்லாகவே தோன்றினும், அதிகன் என்றொரு கடைவள்ளல் பெயரிருந்தமையும், அதனம் என்னும் வடிவம் வடமொழியிலில்லாமையும், அதுங்குதல் (மொய்த்தல்), அதைத்தல் (வீங்குதல், பருத்தல்) முதலிய தொடர்புச் சொற்கள் தமிழிலிருத்தலும், அதிநுட்பம் என வள்ளுவரால் ஆளப்பெற்றமையும்,

சற்றுக் கவனிக்கத்தக்கன.

கரி என்னும் தனிச்சொற்போன்றே அதிகரி என்னும் கூட்டுச் சொல்லும், மிகுதிப் பொருளையே அடிப்படையாகக் கொண்டதாகும். அதிகரித்தல்-மிகுதல். அதிகாரம் என்பது, அதிகரித்தல் என்னும் தொழிற் பெயரின் ஏனைய வடிவம்.

பண்டை வழக்கில், ஒரு நூலின் பெரும் பகுதி படலம் என்றும், அதன் உட்பிரிவு ஓத்து என்றும் கூறப்பட்டன.

66

'இனமொழி கிளந்த ஓத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும்

என்பது தொல்காப்பியம். இதனையே நன்னூலாரும்,

(தொல். செய். 1424)