உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

இலக்கணக் கட்டுரைகள்

3. உடலின் எழுவகைக் கூறு (பிங்.)

4. விந்து (பிங்)

வெயிலிற் காய்ந்து தூளாக உதிர்ந்துபோன சாணத்தைத் தாதெரு என்பது செய்யுள் வழக்கு.

66

'தாதெரு மறுகின் மூதூ ராய்கண்

""

(அகம்.165)

தாதெரு பரந்து கிடக்கும் ஊர்ப்பொதுவிடம் தாதெரு மன்றம் எனப்படும்.

66

"தாதெரு மன்றத் தயர்வர் தழூஉ

+

(கலித் : 103 : 61)

தாது + எரு = தாதெரு, இதுவும் தமிழிலக்கண நெறிப்பட்ட குற்றிய லுகரப் புணர்ச்சியே.

சில குற்றியலுகர வீற்றுச் சொற்களை வடசொல்லென வழுப்படக் கொண்டு நீண்டகாலமாக இதழ்குவித் தொலிப்பதனாலேயே, அவை வடசொற்போல் தோன்றிவிடுகின்றன.

ஏதீடு, தாதெரு என்பன இலக்கணப் போலியான மரூஉக்களல்ல. அவை முதற்காலத்துத் தோன்றிய நெறிப்பட்ட புணர்ச்சிகளே. இக்காலத்தும், கிட்டிணன் (கிருட்டிணன்) என்னும் பெயரின் மரூஉவான கிட்டு என்பதை யும் தம்பி என்பதன் கொச்சைத் திரிபான தம்பு என்பதையும் ஈற்றுகரத்தை இதழ் குவித்தொலித்தல் காண்க. அவற்றின் ஈற்றுகரங்களை முற்றுகரமாக ஒலித்தலாலேயே, அவை, கிட்டுவை, கிட்டுவினால், கிட்டுவிற்கு எனவும். தம்புவை, தம்புவினால், தம்புவிற்கு எனவும்; வேற்றுமை யேற்கின்றன. அவற்றை இலக்கண நெறிப்படி கிட்டை, கிட்டால், கிட்டிற்கு எனவும், தம்பை, தம்பால், தம்பிற்கு எனவும், வழக்கிற்கு மாறாக ஒலிப்பின், இன்னாவோசை தருதல் காண்க. இவ் விரண்டனுள், கிட்டு என்பதை வடசொற் றிரிபென வரைந்தொதுக்கினும், தம்பு என்பதை எங்ஙனம் தள்ளவியலும்?

ஆகவே, ஏது, தாது என்னும் சொற்களும், முற்றுகர வீறாக ஒலிக்கப்பட்டு வரும் நெடுங்கால வழக்கினாலேயே, வடசொற்றன்மை அல்லது வடசொற்போன்மை பெற்றுவிட்டனவென அறிக.

கருவி என்பது போன்ற கரணம் கருமம் என்னும் சொற்களும் தென்சொல்லாயிருப்பவும், கரணம் என்பதைக் கரண என்று ஈறுகெடுத்தும்; கருமம் என்பதைக் கர்மன் என்று வேறுபடுத்தும்; கரண என்பதை நீட்டிக் காரண என்றும் அதற்கேற்பக் கரு என்னும் முதனிலையினின்று கார்ய என்றும் வடவர் புதிதாய் வடசொல் ஆக்கிக்கொண்டது போன்றே, ஏது என்பதை ஹேது என்றும், தாது என்பதை dhatu என்றும், திரித்து ஆரிய மயமாக்கிக்கொண்டனர் என அறிக.

தொல்காப்பியம் எழுத்து நச்சினார்க்கினியர் உரை 1944